சம்பளத்தில் ரஜினிக்கே டஃப் கொடுத்த பிரபல நடிகை.! அதுவும் ஆரம்ப காலத்திலையே.?
ரஜினியை விட நடிகை ஜெயசித்ரா அதிகம் சம்பளம் வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்கும் நடிகர் ரஜினிகாந்த் தற்போது அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார்.இப்போது கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் ரஜினி ,ஆரம்ப காலத்தில் நடித்த படத்திற்காக வாங்கிய சம்பளமும் ,அதை விட அதிகமாக அதே படத்தில் நடித்த நடிகை ஒருவர் வாங்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதாவது ஸ்ரீதர் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இணைந்து நடித்த திரைப்படம் தான் இளமை ஊஞ்சலாடுகிறது . இந்த படத்தில் இவர்களுடன் இணைந்து ஸ்ரீபிரியா, ஜெயசித்ரா ஆகியோரும் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்கள்.இந்த படத்திற்காக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரூ.75,000 சம்பளமாக வாங்கியுள்ளதாகவும்,ஆனால் அதே படத்தில் கதாநாயகியாக நடித்த நடிகை ஜெயசித்ரா ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் சம்பளம் வாங்கியுள்ளதாக அப்படத்தின் தயாரிப்பாளரான எல்.சுரேஷ் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.