சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு ஆதரவாக களமிறங்கிய பிரபல நடிகை!

- சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு ஆதரவாக களமிறங்கிய பிரபல நடிகை.
- ஒவ்வொருவருக்கும் கருத்து சொல்ல உரிமையுள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் சமீபத்தில் நடைபெற்ற துக்ளக் 50-வது ஆண்டு விழாவில் கலந்துகொண்டு, பேசினார். அவ்விழாவில் பேசிய அவர், பெரியார் தலைமையில் ராமர், சீதை அவர்களின் உருவங்கள் நிர்வாணமாக ஊர்வலமாய் எடுத்துச் செல்லப்பட்டது . மேலும் அந்த உருவங்களுக்கு செருப்பு மாலை போடப்பட்டது என்று பேசியுள்ளார்.
ரஜினியின் இந்த பேச்சு பெரும் சர்ச்சைக்குள்ளானது. இதன்விளைவாக ரஜினியின் மீது பல்வேறு இடங்களில் புகார் அளிக்கப்பட்டது. மேலும், ரஜினியின் வீட்டை வருகின்ற 23-ஆம் தேதி முற்றுகையிடப் போவதாக பெரியார் திராவிடர் கழகத்தினர் அறிவித்தனர்.
இதனையடுத்து, ரஜினியின் இந்த பேச்சிற்கு ஆதாராவும், எதிர்ப்பும் எழுந்து வந்த நிலையில், நடிகை குஷ்பு தனது ட்வீட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார்.அந்த பதிவில், ‘சரியோ, தவறோ ரஜினி கருத்தில் நிற்கிறார். நேர்மையுடன் கருத்தை சொல்லலாம், மனதில் உள்ளதை அச்சமின்றி கூறலாம். ஒவ்வொருவருக்கும் கருத்து சொல்ல உரிமையுள்ளது.’ என்று பதிவிட்டுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
டார்கெட் முடிக்காத ஊழியர்கள்… நாயை போல் அலைய வைத்து கொடுமைப்படுத்திய தனியார் நிறுவனம்.!
April 6, 2025
திறப்பு விழா அன்றே பழுது..! பிரதமர் மோடி திறந்து வைத்த பாம்பன் பாலத்தின் தற்போதைய நிலை என்ன?
April 6, 2025
வேட்டி சட்டையில் என்ட்ரி.! பாம்பனில் புதிய ரயில் பாலத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்!
April 6, 2025
நடிகர் ஸ்ரீதர் மறைவு: சினிமா பிரபலங்கள் அஞ்சலி.!
April 6, 2025