கொல்கத்தா சர்வதேச புத்தகக் கண்காட்சியில் பிக்பாக்கெட் செய்த குற்றச்சாட்டின் பேரில் பிரபல நடிகை நடிகை ரூபா தத்தா கைது செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில், நடிகையின் பையில் இருந்து 65,760 ரூபாய் கிடைத்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து விசாரணை மேற்கொண்ட போது ரூபாவால் சரியான பதில் எதுவும் சொல்ல முடியவில்லை. அவர் நெரிசலான கண்காட்சிக்குள் பிக்பாக்கெட் அடித்ததாக ஒப்புக்கொண்டார். மேலும் அவர் இதே செய்வது இது முதல் முறை அல்ல என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து, அவரது பையிலிருந்து போலீசார் நாட்குறிப்பை கண்டுபிடித்தனர். அதில் அவர் திருடியதற்கான கணக்கை பராமரிப்பதற்காக பயன்படுத்தியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, பிதான்நகர் வடக்கு காவல் நிலையத்தின் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயன்யா நாத் சாஹாவின் புகாரின்படி, நடிகர் மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 379/411-ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அவரது ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டது மற்றும் அவர் ஒரு நாள் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார். ரூபா தத்தா டோலிவுட் (வங்காளத் திரையுலகம்) மற்றும் பாலிவுட் இரண்டிலும் பல சீரியல்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கி உள்ள நிலையில், வரும் 2026…
மஞ்சிஸ்டா மூலிகை பொடியை வைத்து முகப்பரு ,கரும்புள்ளி மறையை செய்து முக பொலிவை அதிகரிப்பது எப்படி என பார்க்கலாம் .…
மும்பை : இந்த ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் வருகின்ற பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கி அதற்கு அடுத்த மாதமான…
கொல்கத்தா : நாட்டில் மிகவும் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்திய சம்பவங்களில் ஒன்று கடந்த ஆண்டு மேற்கு வங்கத்தின் கோல்கட்டாவில் மருத்துவ…
சென்னை : பிக் பாஸ் சீசன் 8 தமிழ் ஆரம்பத்தில் எதிர்பார்புகளுடன் தொடங்கப்பட்டாலும் அதற்கு பிறகு சில நாட்கள் வரவேற்பு குறைந்தது…
ஈரோடு : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனுக்கள்…