படத்திற்காக 100 கிலோ எடையை ஏற்றும் பிரபல நடிகர்! தற்போது வரை எதனை கிலோ எடை ஏற்றியுள்ளார் தெரியுமா?
- படத்திற்காக 100 கிலோ எடையை ஏற்றும் பிரபல நடிகர்.
- தற்போது வரை 20 கிலோ வரை உடல் எடையை ஏற்றியுள்ளார்.
இன்றைய திரையுலக பிரபலங்கள் அனைவருமே படத்தில் நடிப்பதற்காக, பட வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என்பதற்காக பல முயற்சிகளில் ஈடுபடுகின்றனர். இதற்காக சிலர் தங்களது உடல் அமைப்புகளையே மாற்றிக் கொள்கின்றனர். இந்நிலையில், தமிழில் சூது கவ்வும், பீட்சா 2, தெகிடி போன்ற படங்களில் நடித்தவர் அசோக் செல்வன்.
தற்போது இவர் இயக்குனர் அனி சசி இயக்கத்தில் தெலுங்கில் புதிய படத்தில் அறிமுகமாக இருக்கிறார். இப்படத்திற்காக அசோக் செல்வன் 100 கிலோ வரை உடல் எடையை ஏற்ற இருக்கிறாராம். தற்போது வரை 20 கிலோ எடை அதிகரித்துள்ள இவர், மேலும் உடல் எடையை ஏற்றும் வெளியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறாராம்.