வலிமை படத்தின் அப்டேட் விரைவில் வெளியாக உள்ளதாக பிரபல நடிகரான ஆர்கே சுரேஷ் தெரிவித்துள்ளார்.
நடிகர் அஜித் தற்போது வலிமை படத்தில் நடித்து முடித்துள்ளார். இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கியுள்ள இந்த படத்தை தயாரிப்பாளர் போனி கபூர் தயாரித்துள்ளார். அம்மா-மகன் என்ற பாசப் பிணைப்பில் உருவாகும் இந்த படத்தில் அஜித் அவர்கள் ஐஏஎஸ் என்ற போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார் என்று கூறப்படுகிறது . இந்த படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். தற்போது வலிமை படத்தின் டப்பிங் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருவதாகவும், கிளைமாக்ஸ் காட்சிக்காக விரைவில் தல அஜித் வெளிநாடு செல்ல உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தது.மேலும் படத்தின் மோஷன் போஸ்டர் ரெடியாகி விட்டதாகவும் கூறப்பட்டது.
இது ஒருபுறம் இருக்க மறுபுறம் டைட்டிலை தவிர இதுவரை வலிமை படத்திலிருந்து எந்த அப்டேட்டும் வெளியாகாத காரணத்தால் தல ரசிகர்கள் அப்டேட் எப்போது என்று கேட்டு வருகின்றனர்.விரைவில் வலிமை அப்டேட் வெளிவரும் என்று காத்து கொண்டிருக்கும் ரசிகர்களுக்கு ஒரு சூப்பர் செய்தி வெளியாகியுள்ளது.அதாவது பிரபல நடிகரும் , தயாரிப்பாளருமான ஆர்.கே.சுரேஷ் வலிமை படத்தின் அப்டேட் விரைவில் வெளியாக உள்ளதாக அறிவித்துள்ளார் . அதனுடன் உடைந்த நாற்காலியில் உட்கார்ந்திருக்கும் தல அஜித் எளிமையான மனிதன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.ஒன்றரை வருடங்களுக்கு மேலாக காத்திருக்கும் தல ரசிகர்களுக்கு இந்த தகவல் குஷியை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே சுரேஷ் வலிமை படத்தின் ஒளிப்பதிவாளரான நீரவ் ஷாவை சந்தித்தும்,அப்போது அவர் வலிமை படத்தின் ஆக்ஷன் காட்சிகள் வேற லெவலில் இருக்கும் என்று கூறியதையும் தனது டுவிட்டர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : இன்று நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2ஆம் கட்ட அமர்வு தொடங்கியுள்ளது. இதில் இன்று கேள்வி பதில் நேரத்தில்…
துபாய் : நேற்று இந்திய கிரிக்கெட் அணி, கேப்டன் ரோஹித் சர்மா தலைமையில் 2வது ஐசிசி கோப்பையை கைப்பற்றியது. 2025…
துபாய் : துபாய் சர்வதேச மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் இந்தியா நியூசிலாந்தை நான்கு…
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு இன்று (திங்கட்கிழமை) தொடங்கியது. இதில் கலந்து கொண்டு மத்திய கல்வி…
டெல்லி : இந்த ஆண்டுக்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு இன்று (திங்கட்கிழமை) தொடங்கியது. இதில்…
ஸ்ரீவைகுண்டம் : தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே பொதுத்தேர்வுக்கு சென்ற 11ஆம் வகுப்பு மாணவனை ஓடும் பஸ்ஸில் மர்ம கும்பல்…