பிரபல நடிகர் ரகுமானின் தாயார் காலமானார்.!

Default Image

நடிகர் ரகுமானின் தாயார் சாவித்ரி வயது மூப்பு காரணமாக நேற்று காலமானார்

தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களில் நடித்துள்ளவர் நடிகர் ரகுமான். அஜித் நடிப்பில் வெளியான பில்லா படம் மற்றும் சூர்யா நடிப்பில் வெளியான சிங்கம் 2 ஆகிய படங்களில் வில்லனாக நடித்தார். மேலும் துருவங்கள் பதினாறு படத்தில் நடித்து ரசிகர்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமானார்.தற்போது நடிகர் ரகுராம் ஜெயம் ரவியின் ஜன கண மன மற்றும் விஷாலுடன் துப்பறிவாளன் 2  ஆகிய திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகர் ரகுமானின் தாயார் சாவித்ரி வயது மூப்பு காரணமாக  பெங்களூருல் உள்ள அவரது இல்லத்தில் நேற்று காலமானார். இவருக்கு வயது 84. இவரது இறுதிச்சடங்கு கேரள மாநிலம் மலப்புறம் மாவட்டத்தில் உள்ள நிலம்பூரில் இன்று நடைபெறுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்