ருத்ர தாண்டவம் படத்தில் பிரபல நடிகர் ராதாரவி இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்தாண்டு சிறிய பட்ஜெட்டில் உருவாகி அனைவராலும் வரவேற்பைப் பெற்ற திரைப்படம் திரௌபதி .மோகன் ஜி இயக்கத்தில் ரிச்சர்ட் ரிஷி நடித்து பல சர்ச்சைகள் மற்றும் விமர்சனங்களுக்கு இடையிலும் பெரும் வரவேற்பைப் பெற்றது.
அடுத்ததாக மோகன் ஜி இயக்கவிருக்கும் திரைப்படம் ருத்ர தாண்டவம்.இதிலும் ரிச்சர்ட் ரிஷி நாயகனாக நடிக்க ,பிரபல சின்னத்திரை நடிகை தர்ஷா குப்தா இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமாகவுள்ளார்.ஜூபின் இசையமைக்கும் இந்த படத்திற்கு ஃபரூக் ஒளிப்பதிவு செய்கிறார். திரௌபதி படத்தை வெளியிட்ட 7ஜி ஃபிலிம்ஸ் சிவா இந்தப் படத்தின் வெளியீட்டு உரிமையைக் கைப்பற்றியுள்ளார் .2021-ம் ஆண்டு மே மாதம் ரிலீஸ் செய்ய உள்ளதாக கூறப்படும் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இந்த நிலையில் தற்போது ருத்ர தாண்டவம் படத்தில் நடிகர் ராதாரவி இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.அவர் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதத்திற்கான கூட்டத்தொடர் திங்கள் முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் உறுப்பினர்கள்…
ஃபுளோரிடா : சர்வதேச விண்வெளி நிலையத்தில் 286 நாட்கள் சிக்கித் தவித்த சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோர் ஸ்பேஸ்…
சென்னை : கடந்த வருடம் ஜூன் மாதம் 5ஆம் தேதி ஸ்டார்லைனர் விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி மையத்திற்கு ஆய்வு…
வாஷிங்டன் : ரஷ்யா உக்ரைன் போரானது நீண்ட மாதங்களான தொடர்ந்து நடைபெற்று வருகிறது. குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் ரஷ்யா,…
ஃபுளோரிடா : கடந்த 2024 ஜூலை மாதம், போயிங் ஸ்டார்லைனர் விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்ற சுனிதா வில்லியம்ஸ்,…
சென்னை : வரும் சனிக்கிழமை முதல் ஐபிஎல் 2025 கிரிக்கெட் போட்டிகள் தொடங்க உள்ளன. முதல் போட்டியில் நடப்பு சாம்பியன்…