தல அஜித்-க்காக விரதமிருந்த பிரபல நடிகர்.! யாரும் அறியாத சம்பவம்.!
தல அஜித் அவர்கள் விரைவில் குணமடைய பிரபல நடிகரான விவேக் அவர்கள் விரதம் இருந்ததாக தெரிய வந்துள்ளது.
தமிழ் சினிமாவில், தன்னுடைய கடின உழைப்பினாலும், விடாமுயற்சியாலும் உச்ச நட்சத்திரமாக திகழ்பவர் அஜித் குமார்.கடந்தாண்டு இவரது நடிப்பில் வெளியான விஸ்வாசம் மற்றும் நேர் கொண்ட பார்வை ஆகிய படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது மட்டுமில்லாமல் சாதனையும் படைத்தது குறிப்பிடத்தக்கது. தற்போது இவர் எச். வினோத் இயக்கத்தில் வலிமை என்னும் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்தை போனி கபூர் தயாரிக்கிறார். மேலும் அஜித் அவர்கள் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் . மேலும் ஹேமா குரேஷி, கார்த்திகேயா, யோகிபாபு உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். தற்போது பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் தற்போது பல வருடங்களுக்கு பின்னர் தலக்காக விவேக் செய்த நல்ல காரியம் ஒன்று வெளியாகியுள்ளது. ஆம் வாலி படப்பிடிப்பின் போது தல அஜித் அவர்களுக்கு பயங்கரமாக அடிப்பட்டதன் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அப்போது நடிகர் விவேக் தல அஜித் அவர்கள் விரைவில் குணமடைய 48 நாட்கள் விரதம் இருந்துள்ளதாக பிரபல பத்திரிக்கையாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். இதிலிருந்து நடிகர் விவேக் அவர்கள் அஜித்தின் மீது எவ்வளவு அன்பு வைத்துள்ளார் என்று தெரிகிறது.