வீரமரணமடைந்த பழனி உட்பட 20 ராணுவ வீரர்களுக்கு இரங்கலை தெரிவித்த பிரபல நடிகர்.!

Published by
Ragi

நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த 20 இராணுவ வீரர்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலை பிரபல நடிகரான செந்தில் தெரிவித்துள்ளார்.

லடாக்கின் கால்வன் பள்ளத்தாக்கில் இந்திய ராணுவத்துக்கும், சீன ராணுவத்துக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் இந்திய தரப்பில் 20 வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.இதில் தமிழகத்தில் ராமநாதபுரத்தை சேர்ந்த பழனி என்ற வீரர், அந்த தாக்குதலில் வீரமரணம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.லடாக் சீன எல்லையில் வீர மரணம் அடைந்த ராணுவ வீரரின் குடும்பத்தினருக்கு ரூ.20 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி அறிவித்தார்.பழனியின் குடும்பத்தில் ஒருவருக்கு தகுதி அடிப்படையில் அரசு வேலை வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் அறிவித்தார்.நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த 20 இராணுவ வீரர்களுக்கு பலர் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர் ‌.

இந்த நிலையில் தற்போது தமிழ் சினிமாவின் பிரபல நகைச்சுவை நடிகரான செந்தில் வீரமரணமடைந்த பழனி மற்றும் பிற வீரர்களுக்கு தனது இரங்கலை தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டார்.அதில் அவர் கூறியிருப்பதாவது,சீன எல்லைக்கும் இந்திய எல்லைக்கும் ஒரு தகராறு ஏற்பட்டது.அந்த தகராறில் சில பேர் மரணமடைந்தார்கள். சில பேர் காயமடைந்தார்கள் . அதில் நம் தமிழ்நாட்டில் உள்ள ராமநாதபுரம் ஜில்லாவை சேர்ந்த பழனி என்பவர் பல ஆண்டுகளாக எல்லையில் பணியாற்றியுள்ளார்.அவர் இப்போது வீரமரணம் அடைந்துள்ளார்.அவருக்கும் அவரது இல்லத்தில் வாழும் குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

 

Published by
Ragi

Recent Posts

தெலுங்கு மக்களிடம் மன்னிப்புக் கோரினார் நடிகை கஸ்தூரி!

தெலுங்கு மக்களிடம் மன்னிப்புக் கோரினார் நடிகை கஸ்தூரி!

சென்னை : தெலுங்கு பேசும் மக்கள் குறித்த சர்ச்சை பேச்சுக்கு நடிகை கஸ்தூரி பகிரங்க மன்னிப்புக் கோரியுள்ளார். தெலுங்கர்கள் அந்தப்புரத்து…

16 mins ago

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் – தேதி அறிவிப்பு!

டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இம்மாதம் 25-ஆம் தேதி தொடங்கும் என்று நாடாளுமன்ற விவாகாரங்கள் துறை அமைச்சர் கிரண்…

56 mins ago

அமெரிக்க அதிபர் தேர்தல் தொடக்கம்! புதிய அதிபர் டிரம்பா? கமலா ஹாரிஸா?

அமெரிக்கா : உலகமே உற்று நோக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்குப்பதிவு இந்திய நேரப்படி சரியாக மாலை…

2 hours ago

இது நம்ம லிஸ்ட்லயே இல்ல! ரிஷப் பண்டுக்கு கொக்கி போடும் பஞ்சாப்!

மும்பை : டெல்லி அணி நிர்வாகம் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளில் கேப்டனாக விளையாடி வந்த ரிஷப் பண்டை…

2 hours ago

இஞ்சி தேன் சாப்பிடுவதால் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகளா ?

இஞ்சி தேன் சாப்பிடுவதால் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகளா ? சென்னை -இஞ்சி தேன் சாப்பிடுவதால் நம் உடலுக்கு ஏற்படும் ஆரோக்கிய…

2 hours ago

2036 ஒலிம்பிக்.. இந்தியாவில் நடத்த IOA விருப்பம்!

டெல்லி : வரும் 2036-ம் ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகளை இந்தியாவில் நடத்த சர்வதேச ஒலிம்பிக்…

2 hours ago