வீரமரணமடைந்த பழனி உட்பட 20 ராணுவ வீரர்களுக்கு இரங்கலை தெரிவித்த பிரபல நடிகர்.!
நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த 20 இராணுவ வீரர்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலை பிரபல நடிகரான செந்தில் தெரிவித்துள்ளார்.
லடாக்கின் கால்வன் பள்ளத்தாக்கில் இந்திய ராணுவத்துக்கும், சீன ராணுவத்துக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் இந்திய தரப்பில் 20 வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.இதில் தமிழகத்தில் ராமநாதபுரத்தை சேர்ந்த பழனி என்ற வீரர், அந்த தாக்குதலில் வீரமரணம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.லடாக் சீன எல்லையில் வீர மரணம் அடைந்த ராணுவ வீரரின் குடும்பத்தினருக்கு ரூ.20 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி அறிவித்தார்.பழனியின் குடும்பத்தில் ஒருவருக்கு தகுதி அடிப்படையில் அரசு வேலை வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் அறிவித்தார்.நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த 20 இராணுவ வீரர்களுக்கு பலர் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர் .
இந்த நிலையில் தற்போது தமிழ் சினிமாவின் பிரபல நகைச்சுவை நடிகரான செந்தில் வீரமரணமடைந்த பழனி மற்றும் பிற வீரர்களுக்கு தனது இரங்கலை தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டார்.அதில் அவர் கூறியிருப்பதாவது,சீன எல்லைக்கும் இந்திய எல்லைக்கும் ஒரு தகராறு ஏற்பட்டது.அந்த தகராறில் சில பேர் மரணமடைந்தார்கள். சில பேர் காயமடைந்தார்கள் . அதில் நம் தமிழ்நாட்டில் உள்ள ராமநாதபுரம் ஜில்லாவை சேர்ந்த பழனி என்பவர் பல ஆண்டுகளாக எல்லையில் பணியாற்றியுள்ளார்.அவர் இப்போது வீரமரணம் அடைந்துள்ளார்.அவருக்கும் அவரது இல்லத்தில் வாழும் குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
இந்திய எல்லையில் வீர மரணம் அடைந்த தமிழ்நாட்டின் நம் ராணுவ வீரர் திரு பழனி அவர்களுக்கு வீர வணக்கம் – நடிகர் செந்தில் pic.twitter.com/43uuEI4Q6K
— Diamond Babu (@idiamondbabu) June 19, 2020