பஞ்ச எச்சரிக்கை.. ஏழு நாடுகளுக்கு 100 மில்லியன் டாலர் நிதி ஒதுக்கிய ஐ.நா..!
கொரோனா தொற்றுநோய்களுக்கு மத்தியில் ஆப்பிரிக்காவிலும், மத்திய கிழக்கிலும் பஞ்ச அபாயத்தில் உள்ள ஏழு நாடுகளுக்கு 100 மில்லியன் அமெரிக்க டாலர் அவசர நிதியை ஐக்கிய நாடுகள் சபையால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அதில், 80 மில்லியன் அமெரிக்க டாலர் பணம் ஆப்கானிஸ்தான், புர்கினா பாசோ, காங்கோ, நைஜீரியா, தெற்கு சூடான் மற்றும் ஏமன் ஆகிய நாடுகளுக்குச் செல்லும் என்று ஒரு அறிக்கை கூறியுள்ளது. தெற்கு சூடானின் சில பகுதிகளில் “2017 க்குப் பிறகு பஞ்சம் அறிவிக்கப்படுவது இதுவே முதல் முறை ” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானுக்கு 15 மில்லியன் , புர்கினா பாசோ 6 மில்லியன் , காங்கோ 7 மில்லியன், வடகிழக்கு நைஜீரியா 15 மில்லியன் , தென் சூடான் 7 மில்லியன் மற்றும் யேமன் 30 மில்லியன் அமெரிக்க டாலர்.
“எத்தியோப்பியாவில் பட்டினியை எதிர்த்துப் போராடுவதற்கான எதிர்பார்ப்பு நடவடிக்கைக்காக” 20 மில்லியன் அமெரிக்க டாலர்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பணம் மிகவும் பாதிக்கப்படக்கூடிய, குறிப்பாக பெண்கள் மற்றும் குறைபாடுகள் உள்ளவர்களை குறிவைக்கும் என்று ஐ.நா. தெரிவித்துள்ளது.