அமெரிக்காவில் 6 வயது சிறுவன் ஒருவன் ஆப்பிள் ஐபேடில் கேம் விளையாடி ரூ.11 லட்சத்தை வீணாக்கியதால் அவரது பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.
நியூயார்க் போஸ்ட்டின் அறிக்கையின்படி, ஆப்பிள் பயனாளர் ஜெசிக்கா ஜான்சன் என்பவர் தனது கணக்கில் இருந்து ஆப்பிள் நிறுவனத்தின் கணக்கிற்கு லட்ச கணக்கான பணம் செல்வதை கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் விசாரணை மேற்கொண்டதில், அவரது 6 வயது மகன் ஜார்ஜ், ஐபேடில் உள்ள சேகாவின் சோனிக் போர்ஸ் என்ற கேம் விளையாடியதிலும், அதில் வழங்கப்படும் கோல்ட் காயின்ஸை பெறுவதற்கும் நாளொன்றுக்கு ரூ.8 லட்சம் செலவிட்டது தெரியவந்தது.
ஆரம்பத்தில் இந்த பரிவர்த்தனைகள் மோசடி என்று ஜெசிக்கா நினைத்ததால், புகார் அளித்தார். மோசடி கோரிக்கையை தாக்கல் செய்த பின்னர், இவை உண்மையில் என்னவென்று தெரிவிக்கப்பட்டது. இதற்காக ஆப்பிள் நிறுவனத்தை தொடர்பு கொள்ளுமாறு கூறப்பட்டது. ஆப்பிளைத் தொடர்பு கொண்ட பிறகு, அவருக்கு குற்றச்சாட்டுகளின் பட்டியலும் வழங்கப்பட்டது. அப்போதுதான் அது அவருடைய மகன் என்பது தெரியவந்தது. பணத்தை திருப்பி அனுப்புவதற்கு சாத்தியமில்லை என ஆப்பிள் நிறுவனம் தெரிவித்ததால், சிறுவனின் குடும்பமே என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்துக் கொண்டிருக்கிறது.
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…
சென்னை : இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கமல், சிம்பு, அசோக் செல்வன், த்ரிஷா, அபிராமி ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள "தக்…
சென்னை : தவெக தலைவர் விஜய், கடந்த மார்ச் மாதம் சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்ற இப்தார் நோன்பு…
சென்னை : அதிமுக - பாஜக கூட்டணியை மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா அறிவித்தது தான் அறிவித்தார்.…
திருவள்ளூர் : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திருவள்ளூர் மாவட்டத்திற்கு பயணம் மேற்கொண்டு அங்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வில்…
ஏமன் : அமெரிக்க ராணுவம் நேற்று (ஏப்ரல் 17) ஏமனின் ஹொதெய்தா மாகாணத்தில் உள்ள ராஸ் இசா எண்ணெய் துறைமுகத்தின்…