கோவிட்-19 குறித்த தவறான வீடியோக்கள் நீக்கப்படும்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை காட்டுபடுத்தா அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதே சமயம் கொரோனா வைரஸ் குறித்தும், அதன் பரவல் குறித்தும் இணையத்தில் பல வதந்தியான செய்திகள் உலா வந்த வண்ணம் உள்ளானது.
இந்நிலையில், நோய் தொற்று காலத்தில் தடுப்பூசி குறித்து தவறான தகவல்கள் மற்றும் கோட்பாடுகளை வழங்கும் வீடியோக்கள் அனைத்தும் யூடியூபில் இருந்து நீக்கம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து யூடியூப் செய்தி தொடர்பாளர் கூறுகையில், உள்ளூர் சுகாதார அதிகாரிகள் அல்லது உலக சுகாதார நிறுவனத்தின் கூற்றுக்கு எதிராக இருக்கும் அல்லது தவறான தகவல்களை அளிக்கும் வீடியோக்கள் தடை செய்யப்படும் என்றும், அதே போல கொரோனா தடுப்பூசி குறித்து தவறான தகவல்களை அளிக்கும் வீடியோக்கள் நீக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே, பிப்ரவரி மாதத்திலிருந்து கொரோனா நோய் மற்றும் அதன் பரவல் குறித்த அபாயகரமான மற்றும் தவறான தகவலை அளித்த சுமார் ஒரு லட்சம் வீடியோக்களை யூடியூப் நீக்கம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
காஞ்சிபுரம் : பரந்தூர் பகுதியில் புதியதாக அமைக்கப்பட உள்ள விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 910 நாட்களாக அப்பகுதி 13…
சென்னை : கனிமவள கொள்ளைக்கு எதிராக போராடிய சமூக ஆர்வலர் ஜெகபர் அலி நேற்று முன்தினம் விபத்தில் உயிரிழந்ததாக கூறப்பட்ட…
சென்னை : பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்க அப்பகுதி கிராம மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில்…
காஞ்சிபுரம் : பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்க அப்பகுதி கிராம மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில்…
சென்னை : மக்கள் பலரும் விரும்பி பார்த்து வந்த பிக் பாஸ் சீசன் 8 தமிழ் நிகழ்ச்சி ஒரு வழியாக நேற்று…
காசா : அக்டோபர் 2023-ல் தொடங்கிய இஸ்ரேல் - ஹமாஸ் போரால் கடந்த 15 மாதங்களுக்கு மேலாக காசா நகர்…