கூகுள் புதிய அறிமுகம் பற்றிய தவறான தகவல்… ஆராய்ச்சியாளர் அதிரடி பணிநீக்கம்.!
கூகுள் நிறுவனம் புதியதாக அறிமுகப்படுத்தப்பட உள்ள LaMDA AI வசதி பற்றி தவறான கருத்து பரப்பியதற்காக ஒரு மென்பொறியாளரை பணிநீக்கம் செய்துள்ளனர்.
கூகுள் நிறுவனம் புதியதாக LaMDA AI எனும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. தற்போது வரை நாம் தவறாக கூகுளில் தேடினாலும், அது சரியாக புரிந்துகொள்ளப்பட்டு, கூகுள் நமக்கு தேவையானதை கொடுத்துவிடும்.
அதே போல வசதியை நாம் பேசும் போதும் தவறாக, அல்லது பேச்சுநடையில் பேசியதை சரியாக புரிந்து கொண்டு நமக்கு உதவி புரிய தான் LaMDA AI எனும் வசதியை அறிமுகப்படுத்த உள்ளது. இதன் சோதனை முயற்சி நடைபெற்று வருகிறது.
இது பற்றி அந்த ஆராய்ச்சியில் இருந்த ஆராய்ச்சி மென்பொருள் பொறியாளர் ஒருவரான , பிளேக் லெமோயின் என்பவர் இந்த புதிய வசதியான LaMDA உணர்வுப்பூர்வமானது, அதாவது தானாக இயங்கும் சக்தி கொண்டது என்பது போல வெளியுலகில் கருத்து கூறிவிட்டார்.
இதனை பார்த்த கூகுள், அவர் கூறியது முற்றிலும் தவறான தகவல் என கூறி, அந்த பிளேக் லெமோயின் எனும் மென்பொருள் பொறியாளரை பணிநீக்கம் செய்துள்ளது.