பிரபல நடிகரின் 6 வயது மகளின் பெயரில் போலி இன்ஸ்டாகிராம் கணக்கு.!

நடிகர் பிருத்விராஜ் அவர்களின் 6 வயது மகளின் பெயரில் போலி இன்ஸ்டாகிராம் கணக்கு உள்ளதாக கொடுத்த புகாரில் பெயரில் அக்கணக்கு நீக்கப்பட்டது.
பிரபலங்கள் பலரின் பெயரில் போலிக் கணக்குகளை சமூக வலைத்தளங்களில் தொடங்குவதும் , அதில் அந்த பிரபலத்தின் புகைப்படத்தையும் பகிர்ந்து வருகிறார்கள் . அவ்வாறு போலிக் கணக்குகளை கண்ட பிரபலங்கள் சிலர் புகார் அளித்து அந்த பக்கத்தை நீக்கவும் செய்துள்ளனர் . அந்த வகையில் பிரபல மலையாள நடிகரும் ,தமிழில் ஒரு சில படங்களில் நடித்தவருமான பிருத்விராஜ் அவர்களின் 6 வயது மகளான அலாக்ரிதா பெயரில் போலி இன்ஸ்டாகிராம் கணக்கு தொடங்கப்பட்டிருந்தது .
அதில் 934 ஃபாலோவேர்ஸை உடைய அந்த போலி இன்ஸ்டாகிராம் கணக்கை பிருத்விராஜ் மற்றும் சுப்ரியா மேனன் நிர்வகிப்பதாக பதிவிட்டிருந்தது. இதனை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து பகிர்ந்த பிருத்விராஜ், இந்த போலி கணக்கை உங்களின் பார்வைக்கு கொண்டு வர விரும்பியதாவும் , தங்களின் 6 வயது மகளுக்கு சமூக ஊடகங்களில் கணக்குகளை தொடங்குவதற்கான அவசியத்தை நாங்கள் காணவில்லை என்றும் , அவள் பெரியவள் ஆனதும் அவளுக்கு வேண்டிய சமூக ஊடக கணக்குகள் குறித்து அவளே தீர்மானிப்பாள் என்று தெரிவித்துள்ளார் . இந்த கணக்கை யாரும் பின்தொடர வேண்டாம் என்றும் பிருத்விராஜ் அவர்களின் மனைவி சுப்ரியா மேனனும் கூறியுள்ளார் . அதனையடுத்து இவர்கள் கொடுத்த புகாரை தொடர்ந்து அந்த போலி கணக்கு இன்ஸ்டாகிராமில் இருந்து நீக்கப்பட்டது .
லேட்டஸ்ட் செய்திகள்
பெண்களை இழிவாக பேசிய விவகாரம்: “பொன்முடி மீது வழக்குப்பதிவு செய்க” – உயர்நீதிமன்றம் அதிரடி..!
April 17, 2025
வக்ஃப் திருத்த சட்டம்: ”இஸ்லாமியர்களின் வயிற்றில் பாலை வார்த்துள்ளது”- தவெக தலைவர் விஜய்.!
April 17, 2025
நடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட டெல்லி பயிற்சியாளர்! எச்சரிக்கை கொடுத்து அபராதம் போட்ட பிசிசிஐ!
April 17, 2025
உச்சநீதிமன்றம் என்ன சூப்பர் நாடாளுமன்றமா? கட்டத்துடன் கேள்விகளை வைத்த துணை குடியரசுத் தலைவர் ஜகதீப் தன்கர்!
April 17, 2025
கோவையில் தவெக பூத் கமிட்டி மாநாடு.! எப்போது தெரியுமா?
April 17, 2025