ஃபேர் அண்ட் லவ்லி கிரீமின் பெயர் மாற்றத்தை தொடர்ந்து எல்’ஓரியல் நிறுவனம் எடுத்த அதிரடி முடிவு!
ஃபேர் அண்ட் லவ்லி கிரீமின் பெயர் மாற்றத்தை தொடர்ந்து எல்’ஓரியல் நிறுவனம் எடுத்த அதிரடி முடிவு.
சமூக வலைதளங்களில் கடந்த சில வாரங்களாகவே அழகு சாதன பொருட்களுக்கும், அதில் நடித்துள்ள நடிகர்களுக்கும் எதிராக கருத்து தெரிவிக்கப்பட்டு வந்தது. இதனையடுத்து இப்போது பல அழகு சாதன பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் வெள்ளை, நிறம் மாற்றம் போன்ற வார்த்தைகளை பயன்படுத்தி விளம்பரம் செய்ய மாட்டோம் என கூறி வருகிற நிலையில், யுனிலிவர் நிறுவனம் ஃபேர் அண்ட் லவ்லி ஃபேர், வொய்ட், லைட் போன்ற வார்த்தைகளை இந்த அழகு சாதன பொருட்களில் இருந்து நீக்க யுனிலீவர் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
இதனை தொடர்ந்து, பிரஞ்சு அழகுசாதன நிறுவனமான எல்’ஓரியல் நிறுவனமும் அதன் அணைத்து அழகுசாதன பொருட்களிலும், ஃபேர், வொய்ட், லைட் என்ற நீக்குவதாக தெரிவித்துள்ளது. இதுகுறித்து எல்-லோரியல் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர்கூறுகையில், ஆழகுசாத பொருட்களை தயாரிக்கும் நிறுவனங்களுக்கு எதிராக எழுந்து வரும் விமர்சனங்களை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.