வேலை தொடங்கும் 9 மணி நேரத்திற்கு முன் பீர் குடித்ததால், தொழிற்சாலை ஊழியர் பணி நீக்கம் செய்யப்பட்டதற்கு, இவருக்கு ரூ.5.5 லட்ச இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளது.
ஸ்காட்லாந்தின் எடின்பர்க் அருகே உள்ள லிவிங்ஸ்டனில் உள்ள யங்ஸ் கடல் உணவு தொழிற்சாலையில் வேலை செய்யும் மல்கோர்சாடா க்ரோலிக், வேலைக்கு வருவதற்கு 9 மணி நேரத்திற்கு முன் பீர் குடித்த காரணத்தால் பணி நீக்கம் செய்யப்பட்டார். க்ரோலிக் காலை 5 மணிக்கு மூன்று பீர் குடித்துள்ளார். இவருக்கு மதியம் 2 மணிக்கு தொழிற்சாலை வேலையின் ஷிப்ட் தொடங்கும்.
அந்நிறுவனத்தில் ஆல்கஹால் அருந்துவது விதி மீறல் ஆகும். இதனால் க்ரோலிக்கை பணி நீக்கம் செய்துள்ளனர். இது தொடர்பான வழக்கில் நீதிபதி தெரிவித்துள்ளதாவது, பிற்பகல் 2 மணிக்கு தொடங்கப்படும் வேலைக்கு அதிகாலையில் வேலை தொடங்கும் 9 மணி நேரத்திற்கு முன் பீர் குடித்ததற்கு தொடர்பு இல்லாததால், க்ரோலிக் நியாயமற்ற முறையில் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மேலும், ஆகஸ்ட் 2020 இல் நடந்த இந்த சம்பவத்திற்கு முன்பு க்ரோலிக் அந்த நிறுவனத்தில் 11 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக தற்போது இவருக்கு இழப்பீட்டு தொகையாக ரூ.5.5 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…
சென்னை : முன்னாள் பாலிவுட் நடிகையும், டிவி ரியாலிட்டி ஷோ 'பிக் பாஸ்' இன் மூலம் பிரபலமான சனா கான்…
பெர்த் : பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரின் முதல் போட்டி இன்று பெர்த் மைதானத்தில் தொடங்கியது. இந்த போட்டியில் முதலில் டாஸ்…
சென்னை : 2025ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறை நாள்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, 2025-ஆம்…
பெர்த் : ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி பெர்த் மைதானத்தில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடி…