பேஸ்புக்கின் தலைமை தொழில்நுட்ப அதிகாரி மைக் ஷெக்ரோப்பர் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார்.
பேஸ்புக்கின் தலைமை தொழில்நுட்ப அதிகாரி மைக் ஷெக்ரோப்பர் தனது பதவியில் இருந்து விலகுவதாக அவரது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இவர் வருகிற 2022 ஆம் ஆண்டில் பதவி விலகி, முதல் மூத்த உறுப்பினராக பகுதி நேர பணியில் ஈடுபட உள்ளதாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது, பேஸ்புக்கை அதிகம் நேசிக்கும் எனக்கு இது நிச்சயம் கடினமான முடிவு தான். இதன் மூலம் குடும்பத்துடனும், சேவை முயற்சிகளிலும் ஈடுபட எனக்கு நேரம் கிடைக்கும். தற்போதுள்ள பேஸ்புக் விர்ச்சுவல் ரியாலிட்டி லேப்ஸின் துணைத்தலைவராக இருக்கும் ஆண்ட்ரூ போஸ்வொர்த் அடுத்ததாக தலைமை தொழில்நுட்ப அதிகாரி பொறுப்பில் பதவி வகிக்க உள்ளார்.
மேலும், பேஸ்புக்கின் மூத்த உறுப்பினராக பணியாற்றுவதில் மிகுந்த பெருமை அடைகிறேன் என்று தெரிவித்துள்ளார். இதனை அடுத்து, போஸ்வொர்த் தலைமையின் மேல் மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளேன் என்றும் கூறியுள்ளார்.
சென்னை : சிபிஎம் மாநில செயலாளர் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கட்சி…
சென்னை : பொங்கல் பண்டிகை வந்துவிட்டது என்றாலே ஜல்லிக்கட்டு போட்டிகளை பார்ப்பதற்கும் விளையாட நினைக்கும் வீரர்களும் குஷியாகிவிடுவார்கள் என்றே கூறலாம். இந்த…
சென்னை : கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் வரும் ஜனவரி 11-ஆம் தேதி சில மாவட்டங்களில்…
அமெரிக்கா : நடந்து முடிந்த தேர்தலில், புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்ப் ஆபாச பட நடிகை ஸ்டார்மி டேனியல்ஸுக்கு பணம்…
குஜராத் : இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமான பயிற்சி ஹெலிகாப்டர் ( ALH Dhruv ) இன்று (ஜனவரி 5)…
கோவை : கே.வடமதுரை, துடியலூர், அப்பநாயக்கன்பாளையம், அருணாநகர், வி.எஸ்.கே.நகர், வி.கே.வி.நகர், என்ஜிஜிஓ காலனி, பழனிகவுண்டன்புதூர், பன்னிமடை, தாளியூர், திப்பனூர், பாப்பநாயக்கன்பாளையம்,…