பல கோடி பயனர்களின் பேஸ்புக் தகவல்கள் கசிந்துள்ளன! வெளியான பகீர் ரிபோர்ட்!

Published by
மணிகண்டன்

உலகம் முழுவதும் அதிகம் இணையதளவாசிகளால் பயன்படுத்தப்படும் சமூக வலைதள பக்கம் பேஸ்புக். இந்த இணைய தள பக்கத்தை பயன்படுத்தி  பல கோடி கணக்கானவர்கள் தங்களது நட்பு வட்டாரத்தை பெருக்கி வருகின்றனர்.

இந்நிலையில் அமெரிக்காவை சேர்ந்த Tech Crunch நிறுவனம் அண்மையில் ஒரு அதிர்ச்சி தகவலை வெளியிட்டது. அதாவது பேஸ்புக்கில் பாதுகாப்பு வசதிகள் குறைவாக உள்ளதாகவும், அதன் காரணமாக  கோடிகணக்கான பயணர்களின்  விவரங்கள் கசிந்து உள்ளதாகவும் தகவல் வெளியானது.

இதில் அமெரிக்காவை சேர்ந்த 11 கோடி பேரின் தகவல்களும், இங்கிலாந்தை சேர்ந்த 1.8 லட்சம் பயனர்களின் தகவல்களும், வியட்நாமை சேர்ந்த 5 கோடி பயனாளர்களின் விவரங்கள் கசிந்துள்ளன என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இவர்களின் ஐடி, முகவரியுடன் சேர்த்து பயனர்களின் மொபைல் நம்பரும் வெளியாகியுள்ளதாம்.  மேலும், பல முக்கிய தகவல்களும், அதாவது பயனர்கள் இருக்குமிடம் முதற்கொண்டு கசிந்துள்ளதாம். இதனால் தேவையில்லாத அழைப்புகளும், விளம்பரங்களும் பயனர்களின் போனுக்கு வந்த அவர்களை தொல்லை செய்கிறதாம். இதன் மூலம் பயணிகளின் முக்கிய விவரங்களை அவர்களின் மொபைல் நம்பர் மூலமாக எளிதாக திருடி விட முடியும் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

Published by
மணிகண்டன்

Recent Posts

அமெரிக்க தேர்தலில் தோல்வி! நாளை பேசும் கமலா ஹாரிஸ்!

அமெரிக்க தேர்தலில் தோல்வி! நாளை பேசும் கமலா ஹாரிஸ்!

அமெரிக்கா : அதிபரைத் தேர்வு செய்யும் தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில், தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றிபெற்று அமெரிக்காவின் அதிபரானார்.…

3 hours ago

2026-ல் கூட்டணி ஆட்சியா.? கையெடுத்து கும்பிட்டு கிளம்பிய திருமா.!

அரியலூர் : இன்று (நவம்பர் 6) புதன்கிழமை அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்டத்தின் வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு…

3 hours ago

தமிழகத்தில் வியாழன் கிழமை (07/11/2024) இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம். எனவே,…

4 hours ago

சூரசம்ஹாரம் உருவான வரலாறும் . .முருக பெருமானின் அற்புதங்களும்..

சூரசம்ஹாரம் தோன்றிய வரலாறு மற்றும் திருசெந்தூரில் சூரசம்ஹாரம் நடைபெறும் நேரம் என்ன என்பதை பற்றி இந்த செய்தி குறிப்பில் காணலாம்…

4 hours ago

“ரொம்ப நன்றி” தேர்தல் வெற்றிக்கு காரணமான மஸ்க்.! நெகிழ்ச்சியுடன் டிரம்ப் பேச்சு..,

வாஷிங்டன் : நடைபெற்று முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட டொனால்ட் டிரம்ப் 277 மாகாணங்களில்…

5 hours ago

‘நான் போர்களை தொடங்கமாட்டேன் …நிறுத்தப்போகிறேன்’ – அதிபர் டிரம்ப் உரை!

ஃப்ளோரிடா : அமெரிக்காவில் நடைபெற்று வந்த அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் 277 மாகாணங்களில் வெற்றி பெற்று 2-வது முறையாக…

5 hours ago