ஃபேஸ்புக் தலைவர் மார்க் ஜுக்கர்பெர்க் வியாழனன்று, அதன் சிக்கலான சமூக வலைப்பின்னலுக்கு அப்பாற்பட்ட எதிர்காலத்தை பிரதிநிதித்துவப்படுத்த, தாய் நிறுவனத்தின் பெயர் “மெட்டா” என மாற்றப்படுவதாக அறிவித்தார்.
சமூக ஊடக ஜாம்பவான் இருக்கும் ஃபேஸ்புக் நிறுவனமானது, அதன் மிக மோசமான நெருக்கடியிலிருந்து விடுபட முயல்வதோடு,”மெட்டாவர்ஸ்” என்ற மெய்நிகர் ரியாலிட்டி பதிப்புடன் தொழில்நுட்ப ஜாம்பவான் எனும் புதிய எதிர்காலத்திற்கு இந்த பெயர் மாற்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இது பற்றி ஜுக்கர்பெர்க் கூறுகையில் “சமூகப் பிரச்சினைகளுடன் போராடி, மூடிய தளங்களில் வாழ்வதில் இருந்து நாங்கள் நிறைய கற்றுக்கொண்டோம், இப்போது நாம் கற்றுக்கொண்ட அனைத்தையும் எடுத்து அடுத்த அத்தியாயத்தை உருவாக்க உதவுவதற்கான நேரம் இது” என்று வருடாந்திர டெவலப்பர்கள் மாநாட்டின் போது கூறினார்.
“இன்று தொடங்கி, எங்கள் நிறுவனம் இப்போது மெட்டா என்று அறிவிப்பதில் பெருமிதம் கொள்கிறேன். எங்களின் நோக்கம் அப்படியே உள்ளது, இன்னும் மக்களை ஒன்றிணைப்பது, எங்கள் பயன்பாடுகள் மற்றும் அவர்களின் பிராண்டுகள், அவை மாறவில்லை,” என்று அவர் மேலும் கூறினார்.
ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப் ஆகியவற்றின் பெயர் மாற்றமின்றி மெட்டா நிறுவனத்தின் கீழ் செயல்படும் எனவும் தெரிவிக்கப்ட்டுள்ளது.
மகாராஷ்டிரா :தென்னிந்தியாவில் ஏற்கனவே, மொழிப் போர் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. மத்திய அரசு மும்மொழிக்கொள்கையை அமல்படுத்த தீவிரம் காட்டி வருகிறது. இது…
கொடைக்கானல்: ஊட்டி, கொடைக்கானல் சுற்றுலா வாகனங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் புதிய கட்டுப்பாடு விதித்து உத்தரவிட்டுள்ளது. கோடை விடுமுறையை முன்னிட்டு…
டெல்லி : ஐபிஎல் 2025 மார்ச் 22 முதல் தொடங்க உள்ளது, முதல் போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைத்தனத்தில்…
சென்னை : நாளை தமிழக அரசு சட்டப்பேரவையில் மாநில பட்ஜெட் 2025 - 2026-ஐ தாக்கல் செய்ய உள்ளது. முதலமைச்சர்…
டெல்லி : ரோஹித் சர்மா சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் இருந்து இப்போது ஓய்வு பெறவில்லை என திட்டவட்டமாக தெரிவித்த நிலையில்.…
சென்னை : தமிழ்நாடு அரசின் 2025-26 நிதியாண்டுக்கான பட்ஜெட், நிதியமைச்சர் தங்கம் தென்னரசு நாளை (மார்ச் 14, 2025) காலை…