முதல் முறையாக தினசரி பயனர்களை இழந்த ஃபேஸ்புக்; மெட்டா பங்குகள் 20% சரிவு..!

Default Image

Facebook, Instagram மற்றும் WhatsApp ஆகியவற்றின் தாய் நிறுவனமான Meta  நிறுவனத்தின் பங்குக 20 சதவீதம் குறைந்துள்ளது.

கூகுளுக்கு அடுத்தபடியாக உலகின் இரண்டாவது பெரிய டிஜிட்டல் விளம்பர தளமான  மெட்டா நான்காவது காலாண்டில் குறைவான பயனர்களால் நஷ்டத்தை சந்தித்து வருகிறது. பேஸ்புக்கின் உலகளாவிய தினசரி செயலில் உள்ள பயனர்கள் முந்தைய காலாண்டில் இருந்து முதல் முறையாக 1.930 பில்லியனில் இருந்து 1.929 பில்லியனாக குறைந்துள்ளனர்.

ஃபேஸ்புக் பயனாளர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதால் அதன் லாபம் பாதிக்கப்பட்டுள்ளதாக தாய் நிறுவனமான மெட்டா அறிவித்துள்ளது. இதனால்,  நிறுவனம் பெறும் விளம்பரங்களிலும் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும். நேற்று வர்த்தகம் தொடங்கிய சில மணிநேரங்களில் மெட்டா நிறுவனத்தின் பங்குகளின் விலை 20 சதவீதம் குறைந்துள்ளது.

இதற்கு காரணம் ஆப்பிளின் தனியுரிமை மாற்றங்கள் மற்றும் TikTok போன்ற நிறுவனத்தின் வளர்ச்சி ஆகியவை என கூறப்படுகிறது. மேலும்,  Netflix போன்ற OTT தளங்களும் காரணம் என்று நிறுவனம் கூறுகிறது. கடந்த ஆண்டின் கடைசி காலாண்டில் மெட்டா 10.3 பில்லியன் டாலர் லாபம் ஈட்டியுள்ளது. இருந்த போதிலும், எதிர்பார்த்த அளவு தினசரி பயனாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை என கூறியுள்ளது.

டிக்டாக் மற்றும் கூகுளின் யூடியூப் போன்ற தளங்களில் Reels ஈடுபாட்டின் காரணமாக வரும் காலாண்டில் வருவாய் வளர்ச்சி குறையும் என்று எதிர்பார்க்கிறது.

 

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்