பேஸ்புக் புதிய பொது கொள்கையின் தலைவராக முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி நியமனம்…!
பேஸ்புக் இந்தியா தனது புதிய பொதுக் கொள்கை இயக்குநராக முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி ராஜீவ் அகர்வாலை நியமித்துள்ளது.
கடந்த ஆண்டு அக்டோபரில் ராஜினாமா செய்த அங்கி தாஸுக்கு பதிலாக,தனது புதிய பொதுக் கொள்கை இயக்குநராக முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியும்,முன்னாள் ஊபர்( Uber) நிர்வாகியுமான ராஜீவ் அகர்வாலை நியமித்துள்ளதாக பேஸ்புக் இந்தியா இன்று தெரிவித்துள்ளது.
அதன்படி,அகர்வால்,இந்தியாவில் உள்ள பேஸ்புக் பயனாளிகளின் பாதுகாப்பு, தரவுப் பாதுகாப்பு மற்றும் தனியுரிமை, உள்ளடக்கம் மற்றும் இணைய நிர்வாகம் உள்ளிட்ட முக்கியமான கொள்கை மேம்பாட்டு முயற்சிகளை வரையறுத்து வழிநடத்துவார் கூறப்பட்டுள்ளது.
அகர்வால் ஐஏஎஸ் அதிகாரியாக 26 வருடம் பணிபுரிந்துள்ளார், மேலும் உத்தரபிரதேச மாநிலம் முழுவதும் ஒன்பது மாவட்டங்களில் மாவட்ட நீதிபதியாக பணியாற்றியுள்ளார்.
அவர் ஐஏஎஸ் அதிகாரியாக இருந்த காலத்தில், இந்தியாவின் முதல் தேசிய கொள்கை அறிவுசார் சொத்துரிமை (IPR கள்) கொள்கையைக் கொண்டு வந்தார்.மேலும்,தொழில் மற்றும் உள் வர்த்தக மேம்பாட்டுத் துறை துறையில் இணை செயலாளராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.