ஃபேஸ்புக் நிறுவனம் – ரே-பான் நிறுவனம் இணைந்து ஸ்மார்ட் கண்ணாடியை அறிமுகப்படுத்தியுள்ளது…!

ஃபேஸ்புக் நிறுவனம் ரே-பான் நிறுவனத்துடன் இணைந்து மொபைல் போன் வசதிகளுடன் கூடிய ஸ்மார்ட் கண்ணாடியை அறிமுகப்படுத்தியுள்ளது.
சமூக வலைதள நிறுவனமான ஃபேஸ்புக் நிறுவனம் ரே-பான் கண்ணாடி நிறுவனத்துடன் இணைந்து தற்போதைய நவீன காலத்திற்கு ஏற்ற வகையில் ரேபான் ஸ்டோரிஸ் எனும் ஸ்மார்ட் கண்ணாடியை அறிமுகம் செய்துள்ளது. இந்த கண்ணாடியில் 5 மெகாபிக்சல் கேமரா, ஓபன் இயர் ஸ்பீக்கர், 3 மைக்ரோபோன்கள் ஆகியவையும் உள்ளது. மேலும் இந்த கண்ணாடி மூலமாக 30 செகண்ட் வீடியோவையும் உருவாக்கலாம் என கூறப்படுகிறது. ஆனால்,இந்த கண்ணாடிகளை உபயோகிப்பதால் தனிமனித உரிமைகளுக்கு ஏதேனும் பாதுகாப்பின்மை ஏற்படுமோ என்ற சந்தேகமும் மக்கள் மத்தியில் உள்ளது.
இந்த கண்ணாடி 20 வகைகளில் கிடைக்கிறதாம். இந்த கண்ணாடி மூலமாக நாம் மொபைல் அழைப்புகளை ஏற்கலாம், இசைகளும் கேட்கலாம். மேலும் இவை இத்தாலி, அயர்லாந்து, ஆஸ்திரேலியா, அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளில் அறிமுகம் செய்யப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த கண்ணாடியின் விலை 299 அமெரிக்க டாலர்கள் என கூறப்படுகிறது. அதாவது இந்திய மதிப்பில் 21,981 ரூபாய். ஆனால், இந்த கண்ணாடியில் AR அப்ளிகேஷன் இல்லை எனவும் கூறப்படுகிறது. இந்த கண்ணாடி ஆன்லைன் மூலமாகவும் ஆர்டர் செய்து வாங்கலாம் என கூறப்பட்டுள்ளது.