தனிநபர் ரகசியத்தை பாதுகாக்க தவறியதால் ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு ரூ.35,000 கோடி அபராதம்!
ஃபேஸ்புக் பயனாளர்களின் தனிநபர் ரகசியத்தை பாதுகாக்க தவறியதாகவும் , தகவல் திருட்டு குறித்து பயனாளர்களுக்கு தகவல் கொடுக்காததாலும் அமெரிக்காவில் உள்ள மத்திய வர்த்தகம் கமிஷன் ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு ரூ.35,000 கோடி அபராதம் விதித்து உள்ளது.
இந்த வர்த்தக கமிஷன் இதுவரை விதித்த அபராத தொகையில் இதுவே அதிகபட்ச தொகையாக உள்ளது. எதிர்காலத்தில் இதுபோன்ற தவறுகள் நடக்காமல் இருக்கவும் பேஸ்புக் நிறுவனம் தகவல் பாதுகாப்பு முறையை மாற்றும் இந்த நடவடிக்கை எடுத்ததாக மத்திய வர்த்தக கமிஷன் தெரிவித்துள்ளது.
இந்த அபராதத்தை ஏற்பதாக பேஸ்புக் நிறுவனத்தின் தலைமை அதிகாரி மார்க் ஸக்கர் பெர்க் தெரிவித்துள்ளார்.