அமெரிக்க அதிபர் டிரம்ப் பதிவிட்ட வீடீயோவை ஃபேஸ்புக் நிறுவனம் நீக்கியுள்ளது.
உலக அளவில் கொரோனா தாக்குதலில் அமெரிக்கா தான் முதலிடத்தில் உள்ளது.அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு தடுப்பு நடவடிக்கைகள் ஒரு புறம் இருந்தாலும் ,அங்கு வருகின்ற நவம்பர் மாதம் தேர்தல் நடைபெறுகிறது.இதற்கான தீவிர தேர்தல் பரப்புரைகள் நடைபெற்று வருகிறது.
கொரோனா மற்றும் தேர்தல் பரப்புரைகள் தொடர்பாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சமூக வலைத்தளங்களில் பதிவிடும் கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.அந்த வகையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் ஃபேஸ்புக்கில் பதிவிட்ட பதிவு ஓன்று சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.அவர் தேர்தல் பிரச்சாரத்தின்போது தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டி அடங்கிய வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.அந்த பதிவில்,குழந்தைகள் கொரோனா நோய்க்கு எதிரான எதிர்ப்பு சக்திகளை கொண்டவர்கள் என்றும் அவர்கள் எளிதாக நோய் தாக்குதலுக்கு ஆளாக மாட்டார்கள் என்றும் அவர் கூறும் வீடியோ ஆகும்.இதனிடையே அவர் பதிவிட்ட பதிவை ஃபேஸ்புக் நிறுவனம் நீக்கியுள்ளது.
இது தொடர்பாக ஃபேஸ்புக் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் ஆண்டி ஸ்டோன் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா வைரஸைப் பற்றி அதிகம் அறியப்படாத நிலையில், அறிகுறிகள் இல்லாமல் கூட மற்றவர்களுக்கு அதைப் பரப்ப முடியும் என்று நம்பப்படுகிறது. “இந்த வீடியோவில் த எங்கள் கொள்கைகளை மீறுவதாகும்” என்று பதிவிட்டுள்ளார்.
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை :கல்யாண வீட்டு ஸ்டைலில் மொச்சை பயிறு கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம்.…
சென்னை : அடுத்த ஆண்டு பொங்கல் விருந்தாக அஜித்குமார் நடித்துள்ள "விடாமுற்சி" படம் வெளியாகவிருக்கிறது. படம் வெளியாக இன்னும் சில…
மெல்போர்ன் : ஆஸ்ரேலியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. இதில், டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன்…