பேஸ்புக்கின் அடுத்த அதிரடி! இந்தியாவில் அறிமுகப்படுத்த நோ நோ!
உலகம் முழுவதும் பல கோடிக்கணக்கான இணையதளவாசிகள் உபயோகப்படுத்தும் இணையதளம் பேஸ்புக் இணையதளம். இந்த பேஸ்புக் நிறுவனமானது, தற்போது புதிதாக பேஸ்புக் சேட்டிங் என்கிற பக்கத்தை வெளியிட்டு உள்ளது.
இந்த சேட்டிங் பக்கத்தில் ஏற்கனவே பேஸ்புக் கணக்கு வைத்து இருப்பவர்கள் அப்படியே உள்ளே செல்லலாம். இல்லை புதிதாக கணக்கு தொடங்கலாம். பயனர் தங்களது சுய விவரங்களை விருப்பங்களை அதில் பதிவேற்றி கொள்ளலாம்.
அதனால் தங்களுக்கு பொருத்தமான இணையை தேடி சேட் செய்துகொள்ளலாம். ஒருவரை மிகவும் பிடித்துவிட்டால் ரகசியமாக க்ரஸ் என வைத்துக்கொள்ளலாம். அது அவர்களுக்கு தன்னை யாரோ பின்தொடர்கிறார்கள் என மட்டும் நோட்டிபிகேஷன் செல்லும்.
இந்த பேஸ்புக் செட்டிங் பக்கமானது அமெரிக்கா, சிங்கப்பூர், மலேசியா, வியட்நாம், மெக்சிகோ என 20 நாடுகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியா போன்ற மற்ற நாடுகளில் 2020இல் அறிமுகமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.