எச்சரிக்கை..!533 மில்லியன் பயனர்களின் பேஸ்புக் தகவல்கள் கசிவு:உங்கள் தகவல் உள்ளதா? என்பதை எவ்வாறு கண்டுபிடிப்பது?
உலகளவில் 533 மில்லியனுக்கும் அதிகமான பயனர்களை பாதித்த பேஸ்புக் தகவல் மீறலில், உங்கள் பேஸ்புக் கணக்கும் உள்ளதா என்பதை நீங்கள் எவ்வாறு கண்டுபிடிப்பது?
சமீபத்தில், உலகளவில் 53 கோடி பேஸ்புக் பயனர்களின் தொலைபேசி எண்கள், முழு பெயர்கள், இருப்பிடங்கள், பிறந்த தேதிகள் போன்ற பிற தகவல்கள் ஆன்லைனில் இலவசமாக கசிந்தன.
ஆகவே,தகவல் மீறல்களைக் கண்காணிக்கும் இணையதளமான ‘ஹேவ் ஐ பீன் ப்வென்ட்’ என்ற டார்க் வெப் வழியாக உங்கள் கணக்கை சரிபார்க்க நீங்கள் அணுகாவிட்டால், பேஸ்புக்கிலிருந்து உங்கள் தனிப்பட்ட தகவல் லீக் ஆனதை அறிய வேறு வழி இல்லை.
1: உங்கள் மொபைல்போன், அல்லது லேப்டாப்பில் ‘https://haveibeenpwned.com/’ க்குச் செல்லவும்.இந்த டார்க் வெப் இணைய தளத்தை விரைவாகக் கண்டுபிடிக்க கூகுள் அல்லது பிங் போன்ற வேறு எந்த இணைய தேடல் கருவியையும் பயன்படுத்தலாம்.
2:மேலே குறிப்பிட்ட டார்க்வெப் பகுதிக்கு சென்றவுடன்,அந்த வலைத்தளத்தின் search பட்டியில், உங்கள் பேஸ்புக் கணக்கில் இணைக்கப்பட்ட இ-மெயில் ஐடியை உள்ளிடவும்.பிறகு வலதுபுறத்தில் உள்ள ‘pwned?’ பட்டனை அழுத்தவும்.
இதனைத் தொடர்ந்து,எந்தவொரு தகவல் மீறலிலும் உங்கள் பேஸ்புக் கணக்கின் தனிப்பட்ட தகவல்கள் உள்ளதா? என்பதை டார்க் வெப் வலைத்தளம் உங்களுக்குத் தெரிவிக்கும். அவ்வாறு உங்கள் திருடப்பட்டிருந்தால் , உங்கள் பாஸ்வேர்ட் மற்றும் பிற பாதுகாப்பு விவரங்களை விரைவில் மாற்றுவது நல்லது. இல்லையென்றால்,உங்கள் தனிப்பட்ட விவரங்களை வைத்து ஹேக்கர்கள் உங்களை தவறான வழியில் பயன்படுத்துவதற்கு வழிவகுக்கும்.