ஹவாயில் 600 ஏக்கர் நிலத்தை 391 கோடிக்கு வாங்கிய பேஸ்புக் தலைமை நிர்வாகி!
பேஸ்புக்கின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் சக்கர்பெர்க் அவர்கள் ஹவாயில் 600 ஏக்கர் நிலத்தை 391 கோடிக்கு வாங்கியுள்ளார்.
பேஸ்புக்கின் தலைமை நிர்வாக அதிகாரி ஆகிய மார்க் சக்கர்பெர்க் அவர்கள் ஹவாயில் 600 ஏக்கர் நிலத்தை வாங்கியுள்ளார். இந்த நிலத்தை 391 கோடிக்கு வாங்கியதாக கூறப்படுகிறது. மார்க் அவர்களுக்கு ஏற்கனவே அங்கு ஏக்கர் கணக்கில் நிலம் உள்ள நிலையில், தற்போதும் 600 ஏக்கர் வாங்கி உள்ளார். இந்த நிலத்துடன் சேர்த்து மொத்தம் இவருக்கு ஆயிரத்து 300 ஏக்கர் நிலம் ஹவாயில் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த இடம் ஹவாய் தீவில் உள்ள கடற்கரைக்கு முன்னால் உள்ள நிலத்தை உள்ளடக்கியது எனவும் கூறப்படுகிறது. இது வயோலி கார்ப்பரேஷன் நிறுவனத்திடமிருந்து மார்க் வாங்கியுள்ளாராம்.
இது குறித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ள மார்க், பாதுகாப்பை ஊக்குவிப்பதற்கு, நிலையான விவசாய உற்பத்தி செய்வதற்கும், பூர்வீக வனவிலங்குகளை பாதுகாப்பதற்காகவும் நாங்கள் நெருக்கமாக எங்கள் ஊழியர்களுடன் சேர்ந்து பணியாற்றி வருகிறோம். மேலும் அதே முயற்சியை லெபூலிக்கும் எதிர்வரும் மாதங்களில் விரிவுபடுத்துவோம் எனவும் தெரிவித்துள்ளார். இந்நிலையில் இது குறித்து தெரிவித்துள்ள வயோலி நிறுவனத்தின் தலைவர் சாம்ராட் அவர்கள், எண்கள் நிலத்தை மார்க் மீதுள்ள நம்பகமான தன்மையின் அடிப்படையில் கொடுத்துள்ளோம் என கூறியுள்ளார்.
மார்க் மற்றும் அவரது மனைவி பிரிஸ்கில்லா பொறுப்பான பொறுப்பாளர்களாக செயல்படுவார்கள் என்பதை நாங்கள் அறிவோம் எனவும் தெரிவித்துள்ளா.ர் மேலும் இதற்கிடையில் ஏற்கனவே இவர்கள் வாங்கிய 750 ஏக்கர் பரப்பளவில் 357 ஏக்கர் கரும்பு தோட்டம் 393 ஏக்கர் நிலம் பீட்ச் ஆகவும் பராமரிக்கப்படுகிறது. எனவே தற்பொழுது உள்ள இடத்தையும் நன்முறையில் பராமரிப்பார்கள் என தனக்கு நம்பிக்கை இருப்பதாக தெரிவித்துள்ளார்.