பேஸ்புக், இன்ஸ்டகிராம் முடங்கியதால் 2 பில்லியன் பயனாளிகள் கடும் அவதி !!!!
- முகநூல் மற்றும் இன்ஸ்டகிராம் பயன்படுத்துவதில் சிக்கல்கள் இருப்பதாக பயனாளர்கள் கூறியுள்ளனர்.
-
மேலும் சைபர் தாக்குதல்கள் தொடர்புடைய பிரச்சினை எதுவும் இல்லை என முகநூல் நிறுவனம் கூறியுள்ளது.
-
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நெட்வொர்க் பிரச்சினையால் முகநூலில் பிரச்சினை ஏற்பட்டது.
சமூக வலைதளங்களில் முன்னிலை வகிக்கும் முகநூல் மற்றும் அதன் துணை நிறுவனமான இன்ஸ்டகிராம் முடங்கியதால் பயனாளர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
2 பில்லியன் பயனாளர்களை கொண்டு உள்ள முகநூல் உலகம் முழுவதும் பல இடங்களில் முடங்கி உள்ளது. இதனால் பயனாளர்கள் தங்கள் ஆதங்கத்தை டுவிட்டரில் கூறிவருகின்றன.
முகநூல் நிறுவனம் டுவிட்டரில் இது தொடர்பாக அறிக்கை ஒன்றையும் வெளியிட்டது. அதில் முகநூல் மற்றும் இன்ஸ்டகிராம் பயன்படுத்துவதில் சிக்கல்கள் இருப்பதாக பயனாளர்கள் கூறியுள்ளனர்.
இப்பிரச்சினையை கூடுமானவரையில் விரைவாக சரி செய்வதாக தெரிவித்து உள்ளது. மேலும் சைபர் தாக்குதல்கள் தொடர்புடைய பிரச்சினை எதுவும் இல்லை என முகநூல் நிறுவனம் கூறியுள்ளது.
மேலும் வட அமெரிக்கா, ஐரோப்பா நாடுகளில் பேஸ்புக் பக்கம் முடங்கியதாக பயனாளர்கள் அதிக அளவில் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நெட்வொர்க் பிரச்சினையால் முகநூலில் பிரச்சினை ஏற்பட்டது. அதனை தொடர்ந்து நவம்பர் மாதம் சர்வர் பிரச்சினையால் முகநூல் முடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.