அமெரிக்காவிற்கு இணையாக கடற்படையை பலப்படுத்தி வரும் சீனா.!
அமெரிக்க போர்க்கப்பலுக்கே சவால் விடும் வகையில் சீனா 075 வகை போர்கப்பல்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
1990-களில் இருந்தே சீனா தனது ராணுவ படைகளை பலப்படுத்தி வருகிறது. தற்போது அமெரிக்காவிற்கு சவால் விடும் வகையில், அமெரிக்காவிற்கு இணையாக சீனா தனது கடற்படையை தாயார்படுத்தி வருகிறது.
சீனா, அண்மையில் தனது கடற்படைக்கு பலம் சேர்க்கும் வகையில், இரண்டு வகையான 075 வகை போர்க்கப்பல்களை அறிமுகப்படுத்தியது. முதல் வகை, கடந்த வருடம் அக்டோபரிலும், இரண்டாம் வகை ஏப்ரல் மாதமும் அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்த வகை போர்க்கப்பல்கள், 40,000 டன் எடை தாங்கும் வகையிலும், 900 ராணுவ வீரர்களை ஏற்றிச்செல்லும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இது அமெரிக்க போர்க்கப்பலில் உள்ள வசதிகளை போல 075 வகை போர்க்கப்பல்கள் உள்ளதாக வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர்.
அந்த போர்க்கப்பலில் 30 ஹெலிகாப்டர்களை நிறுத்தி வைக்க முடியும். அதில், ராணுவ ஜெட் விமானங்களை செங்குத்தாக தரையிறக்க முடியுமென்றால், அது அப்படியே அமெரிக்காவின் F-35B போர்க்கப்பலை போன்றே இருக்கும் என கூறப்படுகிறது.