நேபாளம் மற்றும் பூடானில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் அங்கு பலர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளனர்.
கடந்த மூன்று நாட்களாக திபெத் பகுதியில் பருவமழை பெய்து வருகிறது. இந்த கனமழை காரணமாக நேபாளத்தில் உள்ள ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நேபாளம் மற்றும் திபெத்தின் எல்லையில் இருக்கும் சிந்துபால்சவுக் மாவட்டத்தின் மேலம்சி மற்றும் இந்திராவதி ஆகிய ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளத்தால் அங்கிருக்கும் வீடுகள், சாலைகள் ஆகியவை அடித்து செல்லப்பட்டன.
மேலும், இந்த வெள்ளத்தில் கரையோர மக்கள் பலர் அடித்து செல்லப்பட்டது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த வெள்ளத்தால் இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மக்கள் பலரை தேடும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், ராணுவ ஹெலிகாப்டர் வழியாக மேலம்சி பகுதி மக்களை பாதுகாப்பான இடத்திற்கு மாற்றி வருகின்றனர்.
இதே போன்று பூடானிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அங்கு இருக்கும் லயா என்ற பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவால் பெரிய பாதிப்புகளை சந்தித்துள்ளது. மேலும், கார்டிசெப்ஸ் என்ற மருந்தை சேகரிக்க சென்ற மக்கள் இரவில் அங்கு தூங்கியதால் வெள்ளத்தில் சிக்கியிருக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர்களை மீட்கும் பணியில் தற்போது ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னை : ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவில் இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.66,000-ஐ கடந்தது நகை…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் இன்று தமிழ்நாடு அரசு நிதிநிலை அறிக்கை 2025 – 2026 (பட்ஜெட் 2025)-ஐ…
சென்னை : ஜோ படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக ரியோ நடிக்கும் படங்களின் மீது எதிர்பார்ப்புகள் எழுந்த சூழலில் அவர்…
சென்னை : இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு 2025 2026 ஆம்…
சென்னை : பலரும் பார்த்து ரசித்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய கிரிக்கெட் அணி வெற்றிபெற்ற நிலையில், அடுத்ததாக கிரிக்கெட் ரசிகர்களுடைய…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் இன்று தமிழ்நாடு அரசு நிதிநிலை அறிக்கை 2025 - 2026 (பட்ஜெட் 2025)-ஐ…