இந்தியர்கள் உட்பட வெளிநாட்டவர்கள் திரும்ப அவகாசம் நீட்டிப்பு.!
இந்தியர்கள் உட்பட வெளிநாட்டவர்கள் தங்களுடைய சொந்த நாட்டிற்கு திரும்புவதற்கான காலத்தை ஜூலை 31 வரை நீட்டிப்பதாக பிரிட்டன் அறிவித்துள்ளது.
கொரோனாவை தடுக்க பல நாடுகள் தற்போது ஊரடங்கு பிறப்பித்துள்ளது. இதனால், விமான போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து பல தங்கள் நாடுகளுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பல நாடுகள் தங்கள் நாட்டு மக்களை மீட்க விமானங்களும் அனுப்பி வைக்கின்றனர்.
இந்நிலையில், இங்கிலாந்தில் உள்ள வெளிநாட்டவர்கள் சொந்த நாட்டிற்கு திரும்ப காலத்தை நீட்டிப்பதாக இங்கிலாந்து அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து இங்கிலாந்து உள்துறை செயலாளர் பிரீத்தி பட்டேல் கூறுகையில், வெளிநாட்டவர்கள் இங்கிலாந்தை விட்டு வெளியேற முடியாவிட்டால் அவர்கள் ஜூலை இறுதி வரையில் இங்கிலாந்தில் தங்க முடியும். விசா நீட்டிப்புக்காக உள்துறை அலுவலகங்களைத் தொடர்பு கொண்டவர்கள் விமானம் மற்றும் எல்லை கட்டுப்பாட்டுகள் நீக்கியவுடன் விரைவில் சொந்த நாடுகளுக்கு திரும்புவர்கள்.
மேலும், இங்கிலாந்தில் நீண்டகாலம் தங்குவதற்கான விசாக்களுக்கு விண்ணப்பிக்க ஜூலை 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும், இங்கிலாந்துக்குள் நுழைபவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தலை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்று இங்கிலாந்து உள்துறை செயலாளர் பிரீத்தி தெரிவித்துள்ளார். இங்கிலாந்தில், இதுவரை கொரோனாவால் 259,559 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 36,793 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.