மலேசியாவில் ஜூன் 9 வரை பொதுமுடக்கம் நீட்டிப்பு- மலைசிய பிரதமர் அறிவிப்பு
மலேசியாவில் நாட்டு மக்கள் நலன்கருதி, பொதுமுடக்கத்தை ஜூன் 9 வரை நீடிப்பதாக அந்நாட்டு பிரதமர் தெரிவித்துள்ளார்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் 4,801,875 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 316,671 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 1,858,170 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். இந்த வைரஸின் தாக்கம் அதிகரித்து கொண்டே வருவதால், பல நாடுகள் பொதுமுடக்கத்தை நீடித்து வருகின்றன.
இதனைதொடர்ந்து, மலேசியாவில் ஜூன் 9 வரை பொதுமுடக்கம் நீடிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு பிரதமர் முஹித்தீன் யாசின் கூறினார். மேலும் அவர், தங்கள் நாட்டில் பொருளாதாரம் கட்டுக்குள் இருப்பதால், நாட்டு மக்கள் நலன்கருதி பொதுமுடக்கத்தை நீடிப்பதாக அவர் கூறினார்.
மலைசியாவில் 6,941 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 113 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 5,615 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர்.