கொழும்பு விமான நிலையத்தில் வெடிகுண்டு கண்டெடுப்பு
இலங்கையில், நேற்று 10 இடங்களில் வெடிகுண்டுகள் வெடித்தது. இந்த குண்டுவெடிப்பில் பல பலியாகியுள்ள நிலையில், இலங்கை, கொழும்பு விமான நிலையத்தில் வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கண்டெடுக்கப்பட்ட வெடிகுண்டு செயலிழக்க செய்துள்ளதாக இலங்கை பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில், நேற்று நடந்த குண்டுவெடிப்பில் 215-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். மேலும், இந்த குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக 8 பேரை கைது செய்துள்ளனர்.