குரங்கணி மலையேற்றம் சென்றவர்கள் வனத்துறைக்கு தகவல் அளிக்கவில்லை!
9 பேர் தேனி மாவட்டம் குரங்கணி வனப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கி,உயிரிழந்திருக்கின்றனர்.மேலும் 15 பேர் தீக்காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அதில் சென்னையை சேர்ந்த ஐந்து பேர், கோவையை சேர்ந்த மூன்று பேர் மற்றும் ஈரோட்டைச் சேர்ந்த ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் இதுகுறித்து அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் , மலையேற்றம் சென்றவர்கள் வனத்துறைக்கு தகவல் அளிக்கவில்லை, உரிய அனுமதி பெற்ற பிறகே சென்றிருக்க வேண்டும்” என வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.