வலிமை எதிர்பார்த்தேன்.! வினோத் ஏமாத்திட்டார்.! VP ஓபன் டாக்.!

அஜித் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்ப்புடன் காத்திருந்த திரைப்படம் வலிமை. இந்த படத்தை எச்.வினோத் இயக்கியுள்ளார். பைக் ஸ்டன்ட்கள் நிறைந்த ஆக்சன் படமாக இப்படம் உருவாகியிருந்தது. படத்தில் அஜித்குமார், ஹீமா குரேஷி, புகழ், கார்த்திகேயா, சுமித்ரா, சைத்திரா ரெட்டி போன்ற பல பிரபலங்கள் இருந்தார்கள்.
போனிகபூர் இந்த படத்தை தயாரித்துள்ளார். இந்த திரைப்படம் கடந்த மாதம் 24-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று 200 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.
இந்த நிலையில், அஜித்தை வைத்து மங்காத்தா படத்தை இயக்கிய இயக்குனர் வெங்கட் பிரபு வலிமை படம் குறித்து வெளிப்படையாக தனக்கு திருப்த்தி தரவில்லை என்று சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.
அதில் ” வலிமை படம் நன்றாக இருந்தது. செம ஸ்டண்ட் ஆக்சன் சீன் எல்லாம் அருமையாக இருந்தது. ஆனால், ரசிகனாக நான் ரொம்ப எதிர்பார்த்துவிட்டேன்..நான் இன்னும் நிறையை எதிர்பார்த்தேன்..படம் முழு திருப்த்தியை எனக்கு தரவில்லை. எச். வினோத்த சாருடைய டீடைலிங் எனக்கு ரொம்ப புடிக்கும். தல -வினோத் என்பதால் எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது..கிட்டத்தட்ட ஓகே .. ஆனால், எதோ ஒரு இடத்தில், எனக்கு வலிமை படம் முழு திருப்த்தி தரவில்லை..எதோ ஒன்று மிஸ் ஆன மாதிரி தோணுது” என வெளிப்படையாக கூறியுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
2 நாள் பயணமாக சவுதி அரேபியா புறப்பட்டார் பிரதமர் மோடி.!
April 22, 2025