காதல் திருமணத்தை எதிர்பார்க்கிறேன்.! கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் பட நாயகியின் திருமண ஆசை.!
மனதுக்கு பொருத்தமான ஒருவரை தான் திருமணம் செய்து கொள்வேன் என்று கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் பட நடிகை ரிது வர்மா கூறியுள்ளார்.
சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற திரைப்படங்களில் ஒன்று கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால். தேசிங்கு பெரியசாமி இயக்கிய இந்த படத்தை ஆன்றோ ஜோசப் தயாரித்துள்ளார். மேலும், இப்படத்தின் முக்கிய கதாபாத்திரங்களாக இயக்குநர் கௌதம் மேனன், துல்க்கர் சல்மான், ரிது வர்மா விஜே. ரக்ஷன், நிரஞ்சினி ஆகியோர் நடித்துள்ளனர். இதன் மூலம் பிரபலமான ரிதுவிற்கு பல பட வாய்ப்புகள் வருகின்றன.
தற்போது ஊரடங்கு காரணமாக பல பிரபலங்கள் ரசிகர்களிடம் உரையாடல் நடத்தியும், சேனல்களுக்கு பேட்டி அளித்தும் வருகின்றனர். அந்த வகையில் ரிது வர்மா தெலுங்கு ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் தனது திருமணத்தை குறித்து கூறியுள்ளார். அதில் எனது பெற்றோர் எனது திருமணத்தை பார்க்க ஆவலுடன் காத்திருப்பதாகவும், ஆனால் நான் அவர்களிடம் திருமணத்திற்கு இன்னும் நேரம் இருகிறது என்றும், எனக்கு பொருத்தமான ஒருவரை தான் கண்டுபிடித்து திருமணம் செய்து கொள்வேன் என்றும், தான் காதல் திருமணத்தை தான் எதிர்பார்க்கப்பதாகவும் கூறியுள்ளார்.