3000 வயதுடைய மம்மியின் குரலை கண்டுபிடித்து அசத்திய ஆராய்ச்சியாளர்கள்.!

- 3000 ஆண்டுகளுக்கு முன் பதப்படுத்த மம்மிக்கு குரல் எப்படி இருக்கும் என்பதை மானுடவியல் ஆய்வாளர்கள் வெற்றிகரமாக ஆய்வு செய்துள்ளனர்.
- இந்த குரல் சோதனை வெற்றியடைந்திருந்தாலும்,எதிர்காலத்தில் நெஸ்யமன்னின் குரல் மற்றும் வார்த்தைகள் எப்படி இருந்திருக்கும் என்பது கண்டுபிடிக்க முடியும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
கிமு 11-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆட்சி செய்த பாரோ ரமேசஸ் IX இன் கீழ் நெஸ்யமன் வாழ்ந்தார். இந்த நிலையில் எகிப்தில் உள்ள தீப்த் என்ற இடத்தில் கிமு 1099-1069 இந்த காலகட்டத்தில் வாழ்ந்த நெஸ்யமன் என்ற மதகுருவின் மம்மியை தொல்பொருள் ஆய்வாளர்கள் கண்டறிந்தனர்.
நெஸ்யமன் மதகுரு என்பதால் பாடல்கள் பாடுதல் உள்ளிட்ட மதச் சடங்குகளை அவர் செய்திருப்பார் என்று கருதப்படுகிறது. அவர் இறக்கும்போது 50 வயது இருக்கும் என்றும், அவர் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டிருக்க வாய்ப்பிருப்பதாகவும் கூறப்பட்டது. பின் அந்த கருத்து மாற்றி கூறப்பட்டது. நெஸ்யமன் மரணம் துரிதமாக இருந்திருக்கலாம் எனவும், ஆனால் அதிர்ஷ்டவசமாக 1941-ல் லீட்ஸ் மீது குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு முன்பு அவரது மம்மி நகர்த்தப்பட்டது.
இந்நிலையில், நெஸ்யமன் மம்மியை லிட்ஸ் பொது மருத்துவமனைக்கு அழைத்து சென்று தொடர்ச்சியாக சிடி ஸ்கேன் மேற்கொண்ட நடவடிக்கையை வெளிப்படுத்தினர். லண்டன் பல்கலைக்கழகத்தில் 3000 ஆண்டுகளுக்கு முன் பதப்படுத்த மம்மிக்கு குரல் எப்படி இருக்கும் என்பதை மானிடவியல் ஆராய்ச்சியாளர்கள் வெற்றிகரமாக ஆய்வு செய்துள்ளனர். பின்னர் இந்த மம்மியின் குரல் எப்படி இருக்கும் என்பதை கண்டறிய ஆய்வாளர்கள் கடும் முயற்சி எடுத்தனர். அதன்படி நெஸ்யமனின் குரல்வளையை 3டி பிரிண்டிங் முறையில் ஸ்கேன் செய்துள்ளனர்.
மேலும், மம்மியின் செயற்கை பேச்சுக்குழல் மற்றும் குரல்வளை அமைப்பைக் கொண்டு, மருத்துவர்கள் நெஸ்யமனின் குரலை தற்போது உருவாக்கியுள்ளனர். தற்போது
ஆய்வாளர்களின் இந்த குரல் சோதனை வெற்றியடைந்திருந்தாலும் எதிர்காலத்தில் நெஸ்யமனின் குரல் மற்றும் வார்த்தைகள் எப்படி இருந்திருக்கும் என்பது கண்டுபிடிக்க முடியும் என்றும், மானிடவியல் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : அமித்ஷா பேச்சுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் முதல்.. இன்றைய வானிலை நிலவரம் வரை…
December 19, 2024
ஆத்தி மரத்தின் அசர வைக்கும் நன்மைகள்..!
December 19, 2024
விடுதலை-2வில் 8 நிமிட காட்சிகள் நீக்கம்! ‘ஷாக்’ கொடுத்த வெற்றிமாறன்!
December 19, 2024
கலகலப்பு பட காமெடி நடிகர் கோதண்டராமன் காலமானார்!
December 19, 2024
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன?. எப்போது வருகிறது தெரியுமா?
December 19, 2024