உடற்பயிற்சி, சமையல் வேலைகள் செய்து வருகிறேன் ஸ்மிருதி மந்தனா.!
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இந்தியாவில் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கொரோனாவால் அனைத்து விளையாட்டு போட்டிகளும் ரத்து செய்தும் , தள்ளிவைக்கப்பட்டுள்ளன. இதனால் வீரர், வீராங்கனைகள் வீட்டிலேயே உள்ளனர்.
இந்தியாவில் தற்போது ஊரடங்கு அமலில் இருப்பதால், வீட்டில் எப்படி நேரத்தை செலவிடுகிறார் என்பது குறித்து இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் நட்சத்திர தொடக்க வீராங்கனையான ஸ்மிரிதி மந்தனா பேசும் வீடியோவை இந்திய கிரிக்கெட் வாரியம் வெளியிட்டு இருக்கிறது.
‘நாங்கள் நண்பர்கள் அனைவரும் இணைந்து ஆன்லைன் மூலமாக பகடைக்காய் விளையாட்டு விளையாடி வருகிறோம். இந்த காலகட்டத்தில் உடல் தகுதியுடன் இருக்க நான் தினசரி உடற்பயிற்சியில் செய்து வருகிறேன்.
WATCH????️: Lockdown Diaries with Smriti Mandhana ????
Workouts, troubling her brother, Ludo & a lot more. @mandhana_smriti reveals how she is keeping herself engaged indoors????????️♀️????
Full Video ???? https://t.co/e7EyhdNh3h
— BCCI (@BCCI) April 13, 2020
என் அம்மாவின் சமையல் வேலையில் உதவி செய்கிறேன். எனது சகோதரனுக்கு அன்பு தொல்லை கொடுத்து வருகிறேன். எனக்கு சினிமா படங்கள் பார்ப்பது பிடிக்கும். ஒரு வாரத்தில் இரண்டு முதல், மூன்று படங்களை பார்த்து விடுவேன்.
அதற்கு அடிமையாகி விடக்கூடாது என்பதற்காக அதிகமாக படங்கள் பார்ப்பது கிடையாது. எனது குடும்பத்துடன் நேரத்தை செலவிடவே விரும்புகிறேன் என தெரிவித்தார்.