இந்தோனேசியாவில் ‘ஜூம் வீடியோ கால் ‘மூலம் 100 கைதிகளுக்கு தூக்கு தண்டனை விதிப்பு…!
இந்தோனேசியாவில் கிட்டத்தட்ட 100 கைதிகளுக்கு ஜூம் மற்றும் பிற வீடியோ பயன்பாடுகள் மூலமாக மரண தண்டனை விதிப்பு.
முதலில் சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ், தொடர்ந்து அனைத்து நாடுகளிலும் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. இந்நிலையில், கடந்த ஓராண்டிற்கும் மேலாக கொரோனா தொற்று அனைத்து நாடுகளிலும் பரவி வரும் நிலையில், கல்வித் துறை, நீதித் துறை என அனைத்து துறைகளும் முடக்கப்பட்ட நிலையில் காணப்படுகிறது.
கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வரும் நிலையில், நீதிபதிகள் வீட்டில் வைத்தே காணொலி காட்சிகள் மூலம் விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் இந்தோனேசியாவில் கொலை மற்றும் போதைப் பொருள் கடத்தல் உள்ளிட்ட பெரும்பாலான வழக்குகள் விசாரிக்கப்பட்டு, அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது.
இந்நிலையில் கடந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து இந்தோனேசியாவில் கிட்டத்தட்ட 100 கைதிகளுக்கு ஜூம் மற்றும் பிற வீடியோ பயன்பாடுகள் மூலமாக மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக அம்னேஸ்டி இன்டர்நேஷனல் தெரிவித்துள்ளது.