நாய்களுக்காக சவுதியில் திறக்கப்பட்டுள்ள பிரத்யேகமான கஃபே!

Default Image

சவுதியில் நாய்களுக்காக திறக்கப்பட்டுள்ள பிரத்யேகமான கஃபே.

சவுதி அரேபியாவில் நாய்களுக்காக அட்டகாசமாக உணவருந்த கூடிய விடுதி போன்ற ஒரு கஃபே ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது. தீ பார்க்கிங் லாட் என பெயரிடப்பட்டுள்ள இந்த கடையை குவைத்தை சேர்ந்த பெண்மணி ஒருவர் உருவாக்கியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் நான் குவைத்திலிருந்து சவுதி அரேபிய வந்தபொழுது நாயுடன் கடற்கரையில் நடந்து செல்ல ஆசைபட்டேன். ஆனால் எனக்கு மட்டும்தான் அனுமதிக்கப்பட்டது, எனது நாயை கடற்கரை ஓரத்தில் அழைத்து செல்ல அனுமதிக்கப்படவில்லை. அதுபோல இங்கே இருப்பவர்களும் வருந்துவதை நான் உணர்ந்தேன். எனவே நாய்களும்  நாயின் உரிமையாளர்களும் ஒரே இடத்தில் சந்திக்க கூடிய வகையில் தற்போது காஃபே ஒன்றை திறந்து வைத்துள்ளேன்.

இதனால் நாய்களுடன் அவர்கள் நிறைய நேரத்தில் செலவு செய்ய முடியும் என கூறியுள்ளார். இந்நிலையில் இது குறித்து கடைக்கு வரக்கூடிய வாடிக்கையாளர்கள் கூறும்போது, நாங்கள் எங்களது வளர்ப்புப் பிராணிகளான நாய்கள் மீது மிகுந்த பாசம் வைத்துள்ளோம். ஆனால், வெளியில் அதிகம் அழைத்துச் செல்ல அனுமதிக்கப்படாததால், நேரம் ஒதுக்கவும் முடியாது. அரேபியாவில் முதன் முறையாக நாய்களுக்கான இந்த கடை திறக்கப்பட்டுள்ளது மிகவும் மகிழ்ச்சியை தருகிறது. இதனால் எங்கள் நாய்களுடன் நேரத்தை செலவிடுவது மட்டுமல்லாமல் எங்கள் நாய்கள் பிற நாய்களுடன் பழக்கம் வைத்துக் கொள்ளவும் இது உதவியாக உள்ளது என கூறியுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்