பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்-க்கு படப்பிடிப்பு தளத்தில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
‘கேஜிஎப்’ படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமான பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் தற்போது ‘கேடி’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு பெங்களூரில் நடந்து வருகிறது. ஃபைட் மாஸ்டர் ரவி வர்மா தலைமையில் மிகப்பெரிய வெடிகுண்டு வெடிக்கும் காட்சி படமாக்கப்பட்டு வருகிறது. அப்போது எதிர்பாராமல் அவர் அருகிலேயே குண்டு வெடித்துள்ளது.
இதனால் சஞ்சய் தத்தின் முகம், கை, தோள்பட்டையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, படப்பிடிப்பு உடனடியாக நிறுத்தப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். தற்போது சிகிச்சை நடைபெற்று வருவதாகவும், சஞ்சய் தத்தின் ரசிகர்கள் கவலைப்பட தேவையில்லை என்றும் கன்னட திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும், நடிகர் சஞ்சய் தத் ஏற்கனவே நடிகர் விஜய் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகி வரும் “லியோ” திரைப்படத்தில் முக்கிய வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை 7 ஸ்க்ரீன் நிறுவனம் தயாரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…
திருப்பதி : இந்திய கிரிக்கெட் அணி அண்மையில் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 3-1…
மதுரை : தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். அதிலும்…
சென்னை : இன்று பொங்கல் தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுதுவம் இன்று, நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய தினங்கள்…
சென்னை :கரும்புச்சாறை வைத்து பொங்கல் ரெசிபி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருள்கள்: பச்சரிசி…
சென்னை: துபாயில் நடைபெற்ற வரும் 24 மணி நேர கார் பந்தயத்தில் 922 போர்ஷே கார் பிரிவில், நடிகர் அஜித்குமாரின்…