சாம்பல் பூசணியின் அருமையான நன்மைகள்….!!!
பூசணிக்காய் நாம் அனைவரும் அறிந்த ஒரு காய்கறி தான். இது நமது உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களையும் கொண்டுள்ளது. பூசணிக்காயில் இரண்டு வகை உள்ளது. ஒன்று மஞ்சள் பூசணி, மற்றோன்று சாம்பல் பூசணி. பூசணிக்காய் நமது அருகாமையில் உள்ள சந்தைகளில் கிடைக்க கூடிய காய்கறி தான். இது நமது உடலில் உள்ள பல நோய்களை குணப்படுத்தக் கூடிய ஆற்றல் கொண்டது.
பயன்கள் :
உடல் ஆரோக்கியம் :
பூசணிக்காயை தொடந்து உணவில் சேர்த்து வரும் பொது பெலவீனப்பட்ட உடல், பலமுள்ளதாக மாறி விடும். தசைகள், நரம்புகள் மற்றும் எலும்புகளுக்கு பலம் கொடுத்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது.
வயிற்று பிரச்சனைகள் :
பூசணிக்காயை தொடர்ந்து உணவில் சேர்த்து வந்தால், வயிற்றில் உள்ள பிரச்சனைகளில் இருந்து விடுதலை அளிக்கிறது. வயிற்று புண்கள், வயிற்று எரிச்சல் மற்றும் பல வயிற்று பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு அளிக்கிறது.
நரம்பு தளர்ச்சி :
பூசணிக்காயை தொடர்ந்து உணவில் சேர்த்து வந்தால், நரம்புகளுக்கு பலம் அளிக்கிறது. பூசணிக்காயை தொடர்ந்து உணவில் சேர்த்து வந்தால், நரம்பு தளர்ச்சியில் இருந்து விடுதலை பெறலாம்.
உடல் எடை குறைக்க :
பூசணிக்காயில் குறைவான கலோரிகளே உள்ளது. இதில் குறைவான கலோரி இருப்பதால் இதனை தொடர்ந்து சாப்பிட்டாலும் உடல் எடை பருக்காது. மேலும் இது உடல் எடையை குறைப்பதில் மூக்கையா பங்கு வகிக்கிறது.
உடல் வெப்பம் :
உடலின் வெப்பத்தை தணிக்க இது உதவுகிறது. உடலை குளுமையாக வைத்துக்கொள்ள உதவுகிறது.