Ex-ஹஸ்பன்டின் மனைவியை அவதூறாக பேசிய ரசிகை.! பதிலடி கொடுத்த காஜல் பசுபதி.!

Default Image

சாண்டியின் இரண்டாவது மனைவியை அவதூறாக பேசிய ரசிகைக்கு தவறு என் மீது என்று கூறி பதிலடி கொடுத்துள்ளார் காஜல் பசுபதி.

உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 1-ல் கலந்து கொண்டு பிரபலமானவர் காஜல் பசுபதி. இவர் மௌனகுரு, கோ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இவர் கடந்த 2008ல் நடன இயக்குனரான சாண்டி மாஸ்டரை திருமணம் செய்து கொண்டார். ஆனால் சில காரணங்களால் கடந்த 2012ல் இருவரும் விவாகரத்து செய்து கொண்டனர். காஜல் சாண்டியின் மீது வைத்திருந்த அதிக அன்பு தான் பிரிவுக்கு காரணம் என்று பல பேட்டிகளில் காஜல் கூறியிருப்பார்.

இந்த நிலையில் சமீபத்தில் சாண்டியின் இரண்டாவது மனைவியின் பிறந்தநாளை முன்னிட்டு தனது சமூக வலைத்தள பக்கத்தில் வாழ்த்துக்களை தெரிவித்து புகைப்படம் ஒன்றை வெளியிட்டார். அதற்கு ரசிகர்கள் பலர் கமென்ட் செய்து வர ஒரு ரசிகை சாண்டியின் மனைவியை அவதூறாக பேசி காஜலுக்கு ஆதரவளித்து பேசியுள்ளார். இதற்கு காஜல் தனது டுவிட்டர் பக்கத்தில் தயவுசெய்து சாண்டி மற்றும் அவரது மனைவியை விட்டு விடுங்கள். நான் உங்களுக்கு எத்தனை முறை தான் சொல்வது, நாங்கள் பிரிந்ததற்கு காரணம் எனது தவறு மட்டுமே, நான் அவருக்கு மன நிம்மதியை கொடுக்கவில்லை. நாங்கள் 2012ல் பிரிந்து விட்டோம். அவரது மனைவிக்கு எங்களது விவாகரத்தில் எந்த சம்பந்தமும் இல்லை என்றும், சாண்டி இப்போது என் கணவர் இல்லை என்றும் கூறியுள்ளார். தற்போது காஜலின் இந்த டுவீட்டுக்கு லைக்குகள் குவிந்த வண்ணம் உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 07042025
R Ashwin
edappadi palaniswami sengottaiyan
TN BJP Leader Annamalai - BJP MLA Nainar Nagendran
UttarPradesh - Mosque
Tamilnadu CM MK Stalin
Indian stock market down