சீனா ஆய்வுக்கூடத்தில் இருந்து கொரோனா வந்ததற்கு ஆதாரம் இருக்கிறது என்று அமெரிக்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் சீனாவில் இருந்து முதலில் பரவினாலும் அதிகம் பாதித்துள்ள நாடுகளில் அமெரிக்கா தான் முதலிடத்தில் உள்ளது.கொரோனா பரவிய ஆரம்ப காலத்தில் இருந்து அமெரிக்கா அதிபர் டிரம்ப் சீனா மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.குறிப்பாக,கொரோனா வைரஸ் சீனாவில் உள்ள ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டது.கொரோனா வைரஸை சீனா வைரஸ் என்று அடிக்கடி குறிப்பிட்டு வந்தார்.கொரோனா குறித்து விசாரணை நடத்தப்படும் வேண்டும் அறிவித்தார்.அமெரிக்க அதிபரின் பேச்சுக்கு சீன அரசு கடும் கண்டனம் தெரிவித்தது.
உண்மைக்கு புறம்பான தகவலை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறுவதாக சீனா தெரிவித்தது. ஆனால் உலகில் உள்ள பல்வேறு நாடுகளும் சீனாவில் கொரோனா குறித்து வெளிப்படை தன்மையான தகவல்கள் எதுவும் சரியாக வரவில்லை என்று குற்றச்சாட்டை முன்வைத்தது. அமெரிக்க அதிபரின் குற்றச்சாட்டுகள் குறித்து உலக சுகாதார அமைப்பு கூறுகையில்,சீனாவில் உள்ள ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டது என்ற ஆதாரம் தந்தால் வரவேற்பதாக கூறியது. ஆனால் இதுவரை ஆதாரம் எதையும் அமெரிக்கா தரவில்லை என்று தெரிவித்தது.
இதனிடையே தான் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,கொரோனா வைரஸ் சீனாவில் உள்ள உகான் ஆய்வு கூடத்தில் இருந்து தான் வெளியானது என்பதற்கான ஆதாரம் உள்ளது. மறுப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்தாலும் மகிழ்ச்சி தான். கொரோனா வைரஸ் சீனாவில் இருந்து தான் உருவாகியது என்பதில் டிரம்ப் நிர்வாகம் ஏற்கனவே அறிவித்துள்ளது. இது குறித்து உளவுத்துறை தகவல் சேகரித்து வருகின்றது என்று தெரிவித்தார்.
கோவை: கனமழையின் தீவிரத்தால் ஏற்பட்ட மண் சரிவு காரணமாக மேட்டுப்பாளையம் - உதகை இடையிலான மலை ரயில் சேவை இன்றும்…
அமெரிக்கா : அதிபர் தேர்தல் நேர்மையாக நடக்கும் பட்சத்தில், ஒருவேளை தான் தோற்றால், தோல்வியை ஒப்புக் கொள்வதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.…
கோவை : இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்கிறார். அனுப்பர்பாளையத்தில் ரூ.300…
வாஷிங்க்டன் : அமெரிக்கவில் 47-வது அதிபர் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கிய நிலையில், குடியரசு கட்சியின் வேட்பாளரான டொனால்ட் டிரம்ப்…
அமெரிக்கா : அதிபரை தேர்ந்தெடுக்கும் தேர்தல் வாக்குபதிவு நடந்து முடிந்து தற்போது வாக்கு எண்ணிக்கை மும்மரமாக நடைபெற்று வருகிறது. ஆர்கன்சாஸ்,…
கலிபோர்னியா : அமெரிக்க அதிபர் தேர்தல் இந்திய நேரப்படி நேற்று மாலை தொடங்கி இன்று அதிகாலை நிறைவடைந்தது. அதனை தொடர்ந்து,…