எனக்கு எண்டே கிடையாது என நடிகர் வடிவேலு கூறியுள்ளார்.
கடந்த 1991-ஆம் ஆண்டு இயக்குனர் கஸ்தூரி ராசா இயக்கிய என் ராசாவின் மனசிலே என்ற திரைப்படத்தின் மூலமாகத் தமிழ்த் திரையுலகத்திற்கு அறிமுகமானவர் நடிகர் வடிவேலு. தனது அசாத்தியமான நகைச்சுவை கலந்த நடிப்புத் திறமையால் ரசிகர்கள் அவரை “வைகைப்புயல்” என்று அழைத்தனர். அப்போதிலிருந்து இப்போது வரை அசைக்க முடியாத காமெடியன் என்றால் வைகைப்புயல் வடிவேலு என்று கூறலாம்.
இந்நிலையில், நீண்ட வருடங்கள் கழித்து வடிவேலு இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் உருவாகவுள்ள நாய் சேகர் கதையில், நடிக்கவுள்ளார். இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது.
இந்த படத்தி அறிவிப்பை இயக்குனர் சுராஜ் மற்றும் வடிவேலு பத்திரிக்கையாளர் களை சந்தித்து அறிவித்தனர். அதில் பேசிய வடிவேலு ” என் பயணம் இனி நகைச்சுவை பயணமாகவே இருக்கும். சிரிக்க வைத்துக் கொண்டே கடைசி வரை மக்களுக்கு நன்றி உள்ளவனாக இருப்பேன். தமிழக முதல்வர் ஸ்டாலின் ஐயாவுக்கு நன்றி அவரை பார்த்த நாள் முதல் எனக்கு நல்லது நடக்கிறது. சீக்கிரம் படங்களில் நடிக்க வேண்டும் என முதல்வர் கூறியது மறக்க முடியாது.
என்னை முடக்க நினைத்தவர்களுக்கெல்லாம் நான் சொல்வதெல்லாம் ஒன்று தான் எனக்கு எண்டே கிடையாது….வரலாற்று சம்பந்தப்பட்ட படங்களில் இனிமேல் நடிக்கவே மாட்டேன்..அரசியலை விட மக்கள் விருப்பப்படி, திரையில் நடிப்போம் என வந்து விட்டேன். இப்போது சினிமாவில் மட்டுமே நடிக்கிறேன். வெப்சீரிஸ் எதிலும் நடிக்கவில்லை” என கூறியுள்ளார்.
இன்று நடிகர் வடிவேலு தனது 61-வது பிறந்தநாளை கொண்டு வருகிறார்கள். அவருக்கு ரசிகர்கள் சினிமா பிரபலங்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : சென்னை அடையாறு முத்தமிழ் பேரவை சிவாஜி நினைவிடம் அருகே, திராவிட இயக்கத் தமிழர் பேரவை நடத்தும் "திராவிடமே…
சென்னை : கடந்த மாதம் 27-ல் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தவெக கட்சியின் முதல் மாநாடு நடைபெற்றது. தவெக வெற்றிக்…
கோவை : முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் திமுக செய்தி தொடர்பாளருமான கோவை செல்வராஜ் (66) மாரடைப்பால் இன்று காலமானார். திருப்பதியில்…
சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் 'அமரன்' திரைப்படத்தில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரிப்பதாக குற்றச்சாட்டை முன்வைத்து எஸ்டிபிஐ கட்சியினர், கோவை,…
ஐரோப்பா : மறைந்த பிரிட்டன் அரசி எலிசபெத் இந்த மண்ணைவிட்டு மறைந்தாலும் அவர் பயன்படுத்திய பொருட்கள் பிரமாண்ட விலைக்கு ஏலத்தில்…
சென்னை : நடிகர் சூர்யாவின் “கங்குவா” படத்தை வெளியிடத் தடையில்லை என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. ரூ.55 கோடி ரூபாயை வழங்காமல்…