ஒவ்வொரு மாநிலங்களும் ஒலிம்பிக் விளையாட்டை ஊக்கமளிக்க வேண்டும்..!

Default Image

ஒவ்வொரு மாநிலங்களும் ஒரு ஒலிம்பிக் விளையாட்டுக்கு ஊக்கமளிக்க வேண்டும் என்று கிரண் ரிஜிஜூ கூறியுள்ளார்.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துதான் வருகிறது, இந்த கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது, இதனால் பள்ளிகள் மற்றும் கிரிக்கெட் போட்டிகள் மற்றும் ஒலிம்பிக் போட்டிகள் படங்களின் படப்பிடிப்புகள் அணைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஒலிம்பிக் போட்டியில் இந்தியா அதிக பதக்கம் வெல்ல ஒவ்வொரு மாநிலமும் ஒரு விளையாட்டை தேர்ந்தெடுத்து அதனை மேம்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும் என்று மத்திய விளையாட்டு துறை மந்திரி கிரண் ரிஜிஜூ ஒரு பேட்டியில் கூறியுள்ளார், மேலும் , இது தொடர்பாக நாங்கள் அணைத்து மாநிலங்களுக்கும் கடிதம் எழுதி கொடுத்திருக்கிறோம்.

இதேபோல் செயதால் ஒலிம்பிக் போட்டிகளுக்கு நல்ல முடிவு கிடைக்கும், மேலும் ஒவ்வொரு விளையாட்டுக்கும் ஊக்கம் அளிக்க ஒவ்வொரு கார்ப்பரேட் நிறுவனமும் இந்த ஒலிம்பிக் போட்டிக்காக முன்வர வேண்டும். இதற்காக மற்ற விளையாட்டுகளுக்கு ஆதரவு அளிப்பதை நிறுத்த வேண்டும் என்று நாங்கள் கூறவில்லை.

இந்நிலையில் மேலும் நமது இலக்கு 2028-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில்  முதல் 10 இடங்களுக்கும் வர வேண்டும் என்பதே மல்யுத்தம், குத்துச்சண்டை, வில்வித்தை, ஆக்கி உள்பட 14 விளையாட்டுகளை முன்னுரிமை பட்டியலில் நாங்கள் தேர்வு செய்து இருக்கிறோம் என்றும் கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்