பிக்பாஸ் கால் சென்டரில் கால் செய்த சனமிடம் ,பார்க்குறதுக்கு அழகா இருந்தாலும் வாயை திறந்தா கலீஜ் கலீஜா தான் பேசுவீங்க என்று சம்யுக்தா கூறுகிறார் .
பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் லக்சரி பட்ஜெட் டாஸ்க் வழங்குவது வழக்கம் .அந்த வகையில் பிக்பாஸ் வீடு அடுத்த இரு தினங்களுக்கு கால் சென்டராக மாறுகிறது.இதில் பிக்பாஸ் போட்டியாளர்கள் கால் சென்டரில் வேலை செய்யும் ஊழியர்களிடம் கேட்கும் கேள்விகளுக்கு வரம்பு எதுவும் இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
அதன்படி ஒவ்வொரு போட்டியாளர்களும் நேருக்கு நேர் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.அந்த வகையில் இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது புரோமோவில் பிக்பாஸ் கால் சென்டரில் ஊழியராக உள்ள சம்யுக்தாவிற்கு சனம் கால் செய்து ,நான் தான் காலர் டென்ஷன் ஆகாதீங்க என்று சனம் கூறுகிறார்.அதற்கு சம்யுக்தா டென்ஷன் எங்க மேம் ஆனேன் , நீங்க பார்க்குறதுக்கு அழகா இருந்தாலும் ,வாய திறந்தா கலீஜ் கலீஜா தான் பேசுவீங்க என்று கூறுகிறார்.
அதற்கு சனம் உங்க மனசில அந்த கலீஜ் இருந்தா தான் வாயில வரும் என்று கூறி விட்டு கேப்டன்சி டாஸ்கில் உங்களுக்கு சொந்த புத்தி இல்ல என்று கேட்கிறார் .மற்றவர்களுக்கு நான் தலைவராக இருந்ததில் இவ்வளவு வெறுப்பு இருக்கும் என்று எதிர்பார்க்கவில்லை என்று சம்யுக்தா கூறுகிறார்.எவ்வாறியினும் இந்த வாரம் பிக்பாஸ் ரசிகர்களுக்கு சற்று சுவாரஸ்யமாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை : திரைப்பட நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா, திமுகவுக்கு ஆதரவாக அவ்வப்போது பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகிறார். அவரைப்…
சென்னை : அஜித் குமார் நடிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் விடாமுயற்சி. இப்படம் வருகிற பிப்ரவரி மாதம் 6ஆம்…
ஈரோடு : வரும் பிப்ரவரி 5ஆம் தேதியன்று ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த இடைத்தேர்தலில் திமுக…
சென்னை : மயிலாடுதுறையில் தரங்கம்பாடி , பொன்னேரி, செங்குன்றம் ஆகிய பகுதிகளிலும், சென்னையில் மீனம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும் நேற்று முதல்…
டெல் அவில் : இஸ்ரேல் ஹமாஸ் போரானது கடந்த 2023 அக்டோபர் மாதம் முதல் தொடங்கி 15 மாதங்களை கடந்து…
சென்னை : பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்துள்ள டிராகன் திரைப்படம் வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி வெளியாகும் என முன்னதாக படக்குழு…