இந்த உலகம் சோர்ந்து போனாலும், கொரோனா வைரஸ் சோர்ந்து விடாது – WHO

இந்த உலகம் சோர்ந்து போனாலும், கொரோனா வைரஸ் சோர்ந்து விடாது.
முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் தொடர்ந்து பல நாடுகளில் பரவி வருகிற நிலையில், இந்த வைரஸை தடுக்க மருந்து கண்டுபிடிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த வைரஸ் பாதிப்பால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், இதுவரை இந்த வைரஸ் பாதிப்பால் உலக அளவில், 51,810,890 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 1,279,550 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 36,395,976 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இந்நிலையில், கொரோனா வாயிரஸ் பரவல் குறித்து, உலக சுகாதார அமைப்பின் தலைவர் அவர்கள் கூறுகையில், ‘இந்த உலகம் வேண்டுமானால் சோர்ந்துவிடலாம், ஆனால், கொரோனா வைரஸ் சோர்ந்துவிடாது.’ என தெரிவித்துள்ளார்.