உக்ரைனுக்கு போர் விமானங்கள் வழங்க ஐரோப்பிய நாடுகள் கூட்டமைப்பு முடிவு!
உக்ரைனுக்கு போா் விமானங்களை அளிக்க ஐரோப்பிய நாடுகள் கூட்டமைப்பு முடிவு.
ரஷ்யா – உக்ரைன் போர் உச்சக்கட்டத்தில் இருக்கும் நிலையில், உலக நாடுகள் அனைத்தும் அதிர்ச்சியுடன் பார்த்து வருகிறது.ரஷ்யா தொடர்ந்து உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வரும்போது, பல்வேறு நாடுகள் கண்டங்கள் தெரிவித்து, பல்வேறு தடைகளை ரஷ்யா மீது விதித்து வருகிறது. அதுமட்டுமில்லாமல் ரஷ்யாவை எதிர்த்து போராட உக்ரைனுக்கு நிதி உதவி, ஆயுதங்கள், டாங்கிகள், மருந்து மற்றும் உணவுப் பொருட்களை பல நாடுகள் வழங்கி வருகிறது.
உலகப்போருக்கு பின் இனி ஆயுதங்களை பயன்படுத்தவும் மாட்டோம், யாருக்கும் வழங்கவும் மாட்டோம் என ஜெர்மனி ஏற்கனவே தெரிவித்திருந்த நிலையில், தற்போது அந்த சட்டத்தை திருத்தி, எங்கள் டாங்கிகள் உள்ளிட்ட ராணுவ ஆயுதங்களை உக்ரைனுக்கு வழங்குவதாக தெரிவித்துள்ளது. இதனிடையே, ரஷ்ய விமானங்கள் தங்கள் நாட்டின் வான்வெளியில் பறக்கக்கூடாது என பெரிய நாடுகள் முதல் சிறிய நாடுகள் வரை தடை விதித்துள்ளது.
ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கை கண்டித்து உக்ரைனுக்காக ஆயுத கொள்முதல் செய்ய முடிவெடுத்துள்ளதாக ஐரோப்பிய ஒன்றிய தலைவர் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், உக்ரைனுக்கு தேவையான ஆயுதங்கள் மட்டுமின்றி போர் விமானங்களையும் அளிக்க ஐரோப்பிய நாடுகள் கூட்டமைப்பு முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. ரஷ்யாக்கு எதிராக பல நாடுகள் ஒன்று சேர்ந்து உக்ரைனுக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் நிலையில், பெலாரசில் ரஷ்யா – உக்ரைன் இடையே பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.